‘கலகத் தலைவன்’ அது உதயநிதி தான் இயக்குனர் மகிழ் திருமேனி..!
தடையறத் தாக்க, மீகாமன், தடம்,போன்ற வெற்றி படங்களை இயக்கிய மகிழ் திருமணி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில் நவம்பர் 18ஆம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கும் ‘கலகத் தலைவன்’ .
இப்படத்தைப் பற்றி கூறுகிறார் இயக்குனர் மகிழ்திருமேனி.
என்னுடைய மேற்கண்ட படங்களின் கதை விவாதத்தை முழுவதுமாக முடித்துவிட்டு தான் கதைக்கான தலைப்பை பற்றி யோசிப்பது என் வழக்கம்.ஆனால் இப்படத்தைப் பொறுத்த வரைக்கும் கதை இதுதான் என்று முடிவு செய்யும் பொழுதே தலைப்பும் என் சிந்தனையில் வந்து விட்டது அதுதான் ‘கலகத் தலைவன்’.

இதுல குறிப்பிட்டு சொல்லனும்னா இன்னொரு விஷயம் இருக்கு .இந்த படத்தைப் பொறுத்த வரைக்கும் ஹீரோவை மனசுல வச்சு தான் கதை எழுதினேன்.அந்த கதை எழுதும் போதே கதைக்கான தலைப்பையும் தேர்வு செஞ்சுட்டேன் ஹீரோ உதய் தான் இதுல எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.
இந்தக் கதைக்காகவும், இந்த தலைப்புக்காகவும் நான் ஹீரோ உதயநிதி அவர்களிடம் சொன்ன பொழுது கொஞ்சம் வெயிட் பண்ணுங்க நான் சி எம் அவர்களிடம் கேட்டு சொல்கிறேன் அப்படின்னு சொன்னாரு அதுக்கப்புறம் ஒரு 4 மாதம் கழிச்சு தான் எனக்கு அனுமதி வந்தது அதுக்கு அப்புறம் தான் எல்லாமே நல்லபடியா நடந்தது.
இந்த கதை களத்துக்கு ஒரு காட்சியில் கதாநாயகியை முத்தமிடுவது போல் ஒரு காட்சி தேவை. இதை ஹீரோ உதயநிதியிடம் சொன்ன பொழுது அந்த மாதிரி காட்சிகள் வேண்டாமே என்று கூறினார்.
பிறகு கதையின் சூழலை நன்கு புரிந்து கொண்டு சரிங்க சார் முதலில் கதாநாயகியிடம் அனுமதி வாங்குங்கள் என்று கூறினார்.
அந்த அளவுக்கு ஒரு எளிமையும் பந்தா இல்லாத ஒரு நடைமுறையும் பழகும் விதமும் அவரிடம் ரொம்பவே கவர்ந்தது.

இந்தப் படத்தோட இறுதிக் காட்சி பாண்டிச்சேரியில் மிகப் பழமையான 25 வருடங்கள் மூடிக்கிடந்த ஒரு தொழிற்சாலையில் படமாக்கினோம்.அந்த தொழிற்சாலையில் ஒரு இரும்பு கம்பியாகட்டும், படிக்கட்டுகளாகட்டும் எல்லாமே ரொம்ப இத்து போய் கிடந்தன.இதில் ஒவ்வொரு முறை படபிடிப்பு நடத்தும் போதும் பலமுறை முன்னோட்டம் செய்து நடத்தினோம் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ஹீரோ உதயநிதி என் மேல் வைத்த நம்பிக்கைக்கும்,என் ரசிகர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கும் பதில் நவம்பர் 18ஆம் தேதி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறேன்.படம் ரொம்ப நல்லா வந்திருக்கு எல்லாம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.