• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் தண்டேல் படத்திலிருந்து, நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் – வெளியிடப்பட்டது !!

by Tamil2daynews
January 8, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும்  தண்டேல் படத்திலிருந்து,  நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் – வெளியிடப்பட்டது !!

 

இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் முன்னணி இளம் நடிகர் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் “தண்டேல்” திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்மிக்க தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் பேனரின் கீழ், பன்னி வாஸ் தயாரித்து அல்லு அரவிந்த் வழங்கும், இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் நடந்து வருகிறது.  ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும், இந்தப்படத்தின் முதல் சிங்கிள் “புஜ்ஜி தல்லி” ஒரு பரபரப்பான ஹிட் ஆனது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டாவது சிங்கிள் “நமோ நம சிவாய” பாடல் வீடியோ  தற்போது  வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிவசக்தி பாடல், நடனம், பக்தி மற்றும் கம்பீரத்தை ஒரு இணையற்ற ஆடியோ-விஷுவல் அனுபவமாகக் கலந்து தந்து, ஒரு தலைசிறந்த படைப்பாக மஹாதேவனின் மகிமையைப் போற்றுகிறது. இந்தப் பாடலானது ஒரு தெய்வீகத் தன்மையுடன், நம்முள் ஒரு  ஆன்மீக உணர்வைத் தூண்டுகிறது.  பார்வையாளர்களைப் பயபக்தியுடன் கூடிய பிரமிப்பைத் தருகிறது.

ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், மனதை உருக்கும் இசையில், ஆன்மாவைக் கிளறி, கேட்பவருக்குள் நெருப்பை மூட்டுகின்றது. இந்தப் பாடல், நம் உணர்வோடு கலந்து, உடல் முழுவதும் எதிரொலிக்கிறது, மனதுக்குள் மகிழ்ச்சி மற்றும் பக்தியை உருவாக்குகிறது. இப்பாடல் பாரம்பரிய ஒலிகளை நவீன இசையுடன் தடையின்றி கலக்கிறது. ஜோனவித்துலா எழுதிய பாடல் வரிகள், சிவனின் சர்வ வல்லமை மற்றும் மாயத்தன்மையின் சாரத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துள்ளன, அதே சமயம் மகாலிங்கம்  மற்றும் ஹரிப்ரியா தங்களது ஆத்மார்த்தமான குரல்களால் அசத்தியுள்ளனர். Imageமுன்னதாக லவ் ஸ்டோரி படத்தில் அட்டகாசமான கெமிஸ்ட்ரி மூலம், ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி ஜோடியான நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி, இந்த பாடலில் மிக எளிதாக நம்மை மயக்குகிறார்கள். நாக சைதன்யாவின் நேர்த்தியான மற்றும் சக்திவாய்ந்த நடிப்பு,  சாய் பல்லவியின் நளினம் மற்றும் வசீகரிக்கும் பாவனைகள் நம்மை ஈர்க்கிறது.

இப்பாடலில் சேகர் மாஸ்டரின் நடன அமைப்பு மற்றொரு சிறப்பம்சமாகும், இந்த நடன அமைப்பு,  பாடலை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது. மிக அழகான நடன அமைப்பு, பின்னணி அரங்குகள் என அனைத்தும் , சிவபெருமானுக்கு ஒரு புனிதமான அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது.

மொத்தத்தில், நமோ நம சிவாய பாடல், கலை மற்றும் ஆன்மீக இணைப்பின் மூலம் சிவபெருமானின் மகிமையைக் கொண்டாடுகிறது. இந்த பாடல் வரும் ஆண்டுகளில் மிகப்பெரிய சார்ட்பஸ்டர்களில் ஒன்றாக மாறும்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவு செய்துள்ளார், தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டராக பணியாற்றியுள்ளார், ஸ்ரீநாகேந்திர தங்காலா கலை இயக்கம் செய்துள்ளார்.

“தண்டேல்”  படம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர்கள் : நாக சைதன்யா, சாய் பல்லவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து இயக்கம் : சந்து மொண்டேடி வழங்குபவர்: அல்லு அரவிந்த்
தயாரிப்பாளர்: பன்னி வாஸ்
பேனர்: கீதா ஆர்ட்ஸ்
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : ஷாம்தத்
எடிட்டர்: நவீன் நூலி
கலை: ஸ்ரீநாகேந்திரன் தாங்கலா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Previous Post

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் கூட்டணியில் தயாராகும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Next Post

அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!

Next Post
அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!

அகத்தியா பட முதல் சிங்கிள் பாடல் வெளியானது !!

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.