• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் கூட்டணியில் தயாராகும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

by Tamil2daynews
January 8, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் கூட்டணியில் தயாராகும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

 

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகருமான ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சீப் பிசினஸ் ஆபிசர் உமேஷ் குமார் பன்சால் பேசுகையில், ” தனித்துவம் மிக்க மற்றும் அழுத்தமான கதைகளை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் எங்களின் அர்ப்பணிப்பிற்கு ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ஒரு சான்றாகும். ஜீ.வி. பிரகாஷ் குமாரின் அபாரமான திறமை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறோம். கடல் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கற்பனையுடன் கூடிய சாகசம் நிறைந்த படைப்பு ..பார்வையாளர்களை கவரும். மேலும் இந்த பிரம்மாண்டமான படைப்பில் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைத்திருப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகிறோம்.” என்றார்.
Imageஅறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார்,  திவ்ய பாரதி, ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன் , குமரவேல் , சபு மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.‌ இப்படத்தின் வசனங்களை தீவிக் எழுத, படத் தொகுப்பு பணிகளை ஷான் லோகேஷ் கவனித்திருக்கிறார். எஸ். எஸ். மூர்த்தி கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் அதிரடி சண்டை காட்சிகளையும் அமைத்திருக்கிறார்கள். கடல் பின்னணியில் ஹாரர் அட்வென்ச்சர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் – படத்தை பற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் ‘கிங்ஸ்டன்’ படத்திற்காக சில பிரத்யேக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் முதன்முதலாக பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் இந்தத் திரைப்படம் அவர் நடிப்பில் உருவாகும் 25- வது படமாகும்.  இந்த திரைப்படத்திற்காக அவர் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பதால்.. படத்திற்கான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் அதிகரித்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் டீசர் எதிர்வரும் ஒன்பதாம் தேதியன்று வெளியாகும் என பட தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.‌

Previous Post

பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக ஜன-12ல் வெளியாகும் ‘மதகஜராஜா’

Next Post

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் தண்டேல் படத்திலிருந்து, நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் – வெளியிடப்பட்டது !!

Next Post

அல்லு அரவிந்த் வழங்கும், நாக சைதன்யா, சாய் பல்லவி, தேவி ஸ்ரீ பிரசாத், சந்து மொண்டேடி, பன்னி வாசு, கீதா ஆர்ட்ஸ் இணையும் தண்டேல் படத்திலிருந்து, நமோ நம சிவாயா என்ற சிவசக்தி பாடல் - வெளியிடப்பட்டது !!

Popular News

  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய்யின் த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • “சபரி” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கடத்தல் திரைப்பட டிரெய்லர் வெளியீடு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.