• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி!

by Tamil2daynews
September 28, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தலை வெட்டியான் பாளையம் பட நாயகனும், குக்ட் (Cookd) குழுவினரும் இணைந்து சுவைபட தயாரித்த முருங்கைக்காய் பிரியாணி!

 

தலை வெட்டியான் பாளையம் எனும் அசல் நகைச்சுவை இணைய தொடரின் நாயகனான அபிஷேக் குமார் இணையதள பிரபலமான குக்ட் சமையல் கலைஞர்களுடன் இணைந்து முருங்கைக்காய் பிரியாணி எனும் சாகச சமையலை சுவைபட தயாரித்த காணொளி பிரபலமாகி இருக்கிறது.

யூட்யூபில் 2.7 மில்லியன் சந்தாதாரர்களுடன் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் டிஜிட்டல் சமையல் தொடர்பான ஸ்டார்ட் அப் நிறுவனம் குக்ட் . இந்த யூட்யூப்பில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், சமையல் வகைகள், சமையல் தயாரிப்புகள் மற்றும் பார்வையாளர்களை ஈர்க்கும் ஏராளமான அம்சங்களை கலவையாக தயாரித்து வழங்கி வருகிறது.

தலை வெட்டியான் பாளையம் – ப்ரைம் வீடியோவில் இடம்பெற்றுள்ள அசல் தமிழ் நகைச்சுவை இணைய தொடர். பார்வையாளர்களின் மனதை கவரும் இந்த இணைய தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை கண்டு ரசித்தவர்கள் ஆரோக்கியமானது … ஆத்மார்த்தமானது… தென்றலாக தாலாட்டுகிறது…பெருங்களிப்பை வழங்குகிறது..என பாராட்டுகிறார்கள். இந்த இணையத் தொடரின் நாயகனான அபிஷேக் குமார் – இந்த தொடரில் நகர்ப்புற கிராம செயலாளர் சித்தார்த் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் பிரபலமான தமிழ் சேனலான குக்ட் – உடன் இணைந்து சமீபத்தில்  மகிழ்ச்சியான சமையல் சாகசத்தில் ஈடுபட்டார் . ராஜீவ் இம்மானுவேல் மற்றும் நிர்மல் ஆகியோருடன் அபிஷேக் இணைந்து சுவையான… நாவிற்கு ருசியான.. முருங்கைக்காய் பிரியாணியை தயாரித்தார்.
தலைவெட்டியான் பாளையம்: அசலுக்கு நியாயம் செய்ததா தமிழ் 'பஞ்சாயத்'? | ஓடிடி திரை அலசல் | Thalaivettiyaan Paalayam review - hindutamil.inஒரு நகைச்சுவையான நிகழ்வுகளில் குக்ட் குழுவினர் தங்களின் சிக்கன் பிரியாணிக்கான முக்கிய மூலப் பொருளை காணவில்லை என்பதை உணரும்போது.. அவர்கள் ஒரு சங்கடத்தை எதிர்கொள்கிறார்கள். இந்த தருணத்தில் அதிர்ஷ்டவசமாக முருங்கக்காய் உள்ளிட்ட எல்லாவற்றிலும் உள்ளூரின் நிபுணரான அபிஷேக் எனும் கிராம செயலாளரான சித்தார்த்தை அவர்கள் சந்திக்கிறார்கள்.  பார்வையாளர்களை மகிழ்விக்கும் ஈடுபாட்டுடன் கூடிய உரையாடல்களுடன் அவர்கள் தங்கள் சமையல் சாகசத்தில் வெற்றி பெறுகிறார்களா..? என்பதை அந்தக் காணொளியில் காண்பது உற்சாகமாக இருக்கும்.

இதற்கான வீடியோவை இங்கே பார்க்கவும்… https://www.youtube.com/watch?v=PEYuxg9OtYA

எட்டு அத்தியாயங்கள் கொண்ட நகைச்சுவை இணைய தொடர் தலைவெட்டியான் பாளையம். தமிழகத்தின் தொலைதூர கிராமமான தலை வெட்டியான் பாளையத்தில் தனது புதிய மற்றும் அறிமுகம் இல்லாத சூழலில் சவால்களை எதிர்கொள்ளும் பெரிய நகரத்தை சேர்ந்த ஒருவரின் பயணத்தை விவரிக்கிறது இந்த இணைய தொடர். இயக்குநர் நாகா இயக்கத்தில் உருவான இந்த இணையத் தொடரை பாலகுமாரன் முருகேசன் எழுதி, தி வைரல் பீவர் (TVF) எனும் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்த குடும்ப பொழுதுபோக்குடன் கூடிய இணைய தொடரில் திறமையான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் அதில் அபிஷேக் குமார், சேத்தன் கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி மற்றும் பால்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தலை வெட்டியான் பாளையம் தற்போது தமிழில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஆங்கில சப்டைட்டில்களுடன் வெளியாகி இருக்கிறது.

Previous Post

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்

Next Post

“இரண்டாவது இன்னிங்ஸ் போல உணர்கிறேன்” ; லப்பர் பந்து வெற்றியால் நெகிழும் சுவாசிகா

Next Post

“இரண்டாவது இன்னிங்ஸ் போல உணர்கிறேன்” ; லப்பர் பந்து வெற்றியால் நெகிழும் சுவாசிகா

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “ டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் ” ( Don’t Trouble the Trouble ) மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) இசை வீடியோ வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • “வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.