• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கலியுகம் பட வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார் கலைப்புலி S தாணு

by Tamil2daynews
April 21, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கலியுகம் பட வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார் கலைப்புலி S தாணு

போஸ்ட் அபோகலிப்டிக் சைக்காலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “கலியுகம்” திரைப்படம், மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!

முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில்,  போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில்,  புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக, அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “கலியுகம்”. மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் & பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு படக்குழுவைச் சந்தித்து,படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார்.
ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை  அமைக்கப்பட்டுள்ளது.  பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை  இப்படம் சொல்கிறது.  முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான  சம்பவங்களுடன், ஒரு அழுத்தமான திரில் பயணமாக, ரசிகர்களை புதிய உலகிற்கு இப்படம் கூட்டிச் செல்லும்.

இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இனியன் சுப்ரமணி, அஸ்மல், ஹரி, மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் கே ராம் சரண் இப்படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார்.  உலகத் தரத்தில், உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், மிகச்சிறந்த திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு விபரம்
எழுத்து, இயக்கம் – பிரமோத் சுந்தர்
தயாரிப்பாளர் – கே.எஸ். ராமகிருஷ்ணா, கே. ராம்சரண்
இணை தயாரிப்பாளர் – யு.சித்தார்த்
தயாரிப்பு நிறுவனம் – ஆர்கே இன்டர்நேஷனல், பிரைம் சினிமாஸ்
ஒளிப்பதிவாளர்: கே.ராம்சரண்
கலை இயக்குனர் – எம்.சக்தி வெங்கட்றாஜ்
இசையமைப்பாளர்: டான் வின்சென்ட்
எடிட்டிங் – நிம்ஸ்
வசனம் – கார்த்திக் குணசேகரன், ஆத்ரேயா & கற்கவி
உடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா
ஒலி வடிவமைப்பு – டான் வின்சென்ட்
ஒலி கலவை – தபஸ் நாயக்
கலரிஸ்ட் – எஸ். ரகுநாத் வர்மா (B2H ஸ்டுடியோஸ்)
VFX: CA டிஜிட்டல் ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
போஸ்டர் டிசைன் – சிவகுமார் (சிவாடிஜிட்டலார்ட்)

Previous Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ (ACE) திரைப்படம்,மே மாதம் 23 ஆம் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது

Next Post

20 – ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ‘சச்சின்’!

Next Post

20 - ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் 'சச்சின்'!

Popular News

  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

    0 shares
    Share 0 Tweet 0
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க, ‘ரைட்டர்’ பட இயக்குநரும் ‘DC’ படத்தின் எழுத்தாளருமான ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில், இளைய திலகம் பிரபு மற்றும் புது வரவான பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ்பெற்ற விஜய் வர்மா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.

    0 shares
    Share 0 Tweet 0
  • முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் ஹாரர் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் கே.எஸ். சினிஷ் வழங்கும் ‘நிஞ்ஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24 ஆம் தேதி பூஜையுடன் தொடக்கம்!

August 26, 2026

சாய் அபயங்கர் – பாக்யஸ்ரீ போர்ஸ் கூட்டணியில் உருவான ‘ரதிமா’

August 26, 2026

ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!

August 26, 2026

சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா!

August 26, 2026

பிரசாந்த் வர்மாவின் ‘மகாகாளி’ படத்தின் வெளியீட்டு தேதி & பிரத்யேக கிளிம்ப்ஸ் வெளியீடு

August 26, 2026

‘சிட்டுக்குறிஞ்சி’ முதல் பாடல் குறிஞ்சி மலை மேல 15 லட்சம் பார்வைகளை கடந்து சாதனை!

August 26, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.