• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்

by Tamil2daynews
March 20, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் 2 சுவாரஸ்யமான திரைப்படங்களில் இணைந்துள்ளனர்

 

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் இணைந்து இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளனர்

முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான பிரேமலு படத்தினை தெலுங்கு ரசிகர்களுக்கு தெலுங்கு மொழியில் வெளியிட்டதன் மூலம் திரைப்பட  விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஷோயிங் பிசினஸ் (Showing Business) பேனரின் கீழ் இப்படத்தை விநியோகித்தார்.  எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் வெளியீடே  தெலுங்கு பதிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்கள் பேராதாரவுடன்  ஒவ்வொரு நாளும் பெரும் வசூலை குவித்து வருகிறது.

பிரேமலுவின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பெற்ற நம்பிக்கையால் உற்சாகமடைந்துள்ள எஸ்.எஸ்.கார்த்திகேயா அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்குகிறார், மேலும் இந்தியாவின் பெருமைமிக்க, புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான பாகுபலி பட நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸுடன் இணைந்து, தான் அடுத்ததாக தயாரிக்கவுள்ள அடுத்த  இரண்டு திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்க, பிரமாதமான தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா எஸ்.எஸ்.கார்த்திகேயாவுடன் கைகோர்க்கிறார், உலகப்புகழ் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தப் படங்களை வழங்குகிறார்.பிரேமலுவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்முக நடிகர் ஃபஹத் பாசில் இரண்டு படங்களிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவற்றில் ஒன்றை, “ஆக்சிஜன்” என்ற தலைப்பில், ஒரு ஊக்கமளிக்கும் நட்பைப் பற்றிய கதையில்,  அறிமுக இயக்குநர் சித்தார்த் நாதெல்லா இயக்குகிறார். மற்றொன்று, “டோண்ட் டிரபிள் த டிரபிள்” என்ற தலைப்பில் ஒரு பரபரப்பான ஃபேண்டஸி கதையை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்குகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும்  தனித்துவமான மற்றும் உள்ளடக்கத்தில் சிறந்த  படங்களாக இருக்கும்.

‘பாகுபலி’ உலக அரங்கில் புகழ் பெறுவதற்கு முன்னதாகவே , பேனரை பிரபலப்படுத்துவதற்கு முன்னதாகவே, ‘வேதம்’, ‘மர்யதா ரமணா’, ‘அனகனா ஒக தீருடு’ மற்றும் பஞ்சா உள்ளிட்ட பல்வேறு ஜானர்களில் தனித்துவமான படங்களை  ஆர்கா மீடியா  நிறுவனம் வழங்கியுள்ளது.
பிரேமலுவை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கியதற்காக தெலுங்கு பார்வையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த போது, எஸ்.எஸ்.கார்த்திகேயா தனது தயாரிப்பில் உருவாகவுள்ள படங்கள் குறித்த அறிவிப்பை,  வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்.. “பிரேமலு! மூலம், என்  முதல் அவதாரமான விநியோகஸ்தர் பயணத்திற்கு, நீங்கள் அனைவரும் அளித்திருக்கும் அளவில்லாத அன்பிற்கு நன்றி!!  இந்த வெற்றி நல்ல சினிமாவுக்கு மொழித் தடைகள் எதுவும் தெரியாது என்கிற எனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியது! இந்தப் படத்தை விநியோகிக்கும் போது அதன் ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்தேன். , ஒவ்வொரு டிக்கெட்டின் விற்பனையையும், ஹவுஸ் ஃபுல் தியேட்டர் போன்ற உணர்வாக கொண்டாடுகிறேன். கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஆஸ்கார் விருதுகளின் போது நான் அனுபவித்த  மகிழ்ச்சிக்கு நிகரானது இது.”

மேலும் அவர் கூறுகையில்.., “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அறிமுக நடிகர் சித்தார்த் நாதெல்லாவுடன் ஒரு ஊக்கமளிக்கும் நட்பு பற்றிய கதையின் விவாதத்தின் போது, அறிமுகமான ஷஷாங்க் யெலேட்டியிடம் இருந்து மற்றொரு சிலிர்ப்பான ஃபேண்டஸி கதை எங்கள் முன்னால் வந்தது, இது எங்களை பெருமளவில் உற்சாகப்படுத்தியது. இருப்பினும், இரு கதைகளும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இரண்டு திரைக்கதைகளுக்கும் ஒரே நடிகர் என்பதையும், முதல் கதையின்போதே அவர் அதை ஒப்புக்கொள்வார் என்பதையும் நம்பவில்லை.இவ்வளவு காலம் நான் நேசித்த மனிதர், பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் சார். இது உங்களுக்கு எங்கள் #பிரேமலு. இந்த பயணத்தில் என்னுடன் கைகோர்த்ததற்கும், ஊக்குவித்ததற்கும் நன்றி ஷோபு அவர்களே.” என தெரிவித்துள்ளார்.

Previous Post

அமேசான் ப்ரைம் தளத்தில் உலகளவில் புதிய சாதனைகள் படைக்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படம் !!

Next Post

சிலிர்க்கவைக்கும் திகில் க்ரைம் டிராமா இன்ஸ்பெக்டர் ரிஷி-இன் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது

Next Post

சிலிர்க்கவைக்கும் திகில் க்ரைம் டிராமா இன்ஸ்பெக்டர் ரிஷி-இன் டிரெய்லரை பிரைம் வீடியோ வெளியிட்டது

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “ டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் ” ( Don’t Trouble the Trouble ) மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) இசை வீடியோ வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • “வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.