• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“நினைவெல்லாம் நீயடா” படத்திற்காக இசைஞானி இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா!!

by Tamil2daynews
November 23, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“நினைவெல்லாம் நீயடா” படத்திற்காக இசைஞானி இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய
யுவன் சங்கர் ராஜா!!
இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட. இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இதயகோயில்” படத்தில் “இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்” தான் இளையராஜா எழுதிய முதல் பாட்டு. பாரதிராஜா இயக்கிய “நாடோடி தென்றல்” படத்தின் அனைத்து பாடல்களையும் இளையராஜாவே எழுதியிருந்தார். அனைத்துமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த “விடுதலை” படத்தில் இடம்பெற்ற “வழிநெடுக காட்டுமல்லி…” என்ற பாடலை இளையராஜா எழுதி பாடியிருந்தார். அந்த பாடல், இசை ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

அதை தொடர்ந்து ஆதிராஜன் எழுதி இயக்க ராயல் பாபு தயாரிப்பில் பிரஜன் மனிஷா யாதவ் சினாமிகா யுவலட்சுமி ரோகஹித் ரெடின் கிங்ஸ்லி முத்துராமன் பி எல் தேனப்பன் டைரக்டர் ஆர்.வி. உதயகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் “நினைவெல்லாம் நீயடா” படத்தில் ‘இதயமே இதயமே இதயமே…. உன்னை தேடி தேடி கழிந்தது இந்த பருவமே…’என்ற பாடலை இளையராஜா எழுதியிருக்கிறார். இளையராஜா இசையில் யுவன் சங்கர் ராஜா சில பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் முதல் முறையாக தன் தந்தை எழுதிய பாடலை இந்த படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த பாடல் ஜீ மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் நேற்று மாலை வெளியிடப்படடது. பிரபல இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் டி இமான் ஆகியோர்  இந்த பாடலை தங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ரிலீஸ் செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Previous Post

டங்கி: டிராப் 2 – லுட் புட் கயா – டங்கி படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது

Next Post

Silence Roars: ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் 54வது IFFI கோவா காலா பிரீமியர்ஸில் முதல் சைலண்ட் படமாக ப்ரீமியர் செய்யப்பட்டதை அடுத்து இந்தப் பட அனுபவங்களை படத்தின் நடிகர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்!

Next Post

Silence Roars: 'காந்தி டாக்ஸ்' திரைப்படம் 54வது IFFI கோவா காலா பிரீமியர்ஸில் முதல் சைலண்ட் படமாக ப்ரீமியர் செய்யப்பட்டதை அடுத்து இந்தப் பட அனுபவங்களை படத்தின் நடிகர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • கிரிக்கெட் ஜாம்பவான் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் ‘எல் ஜி எம்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்காக சென்னைக்கு வருகை தந்திருக்கிறார்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • *‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’யில் ஒரு நிமிஷம் மிஸ் பண்ணாலும் கதை புரியாது*  

    0 shares
    Share 0 Tweet 0
  • பாசத்தில் போட்டிபோடும் அண்ணன் தங்கை கதை…

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் உருவாகியுள்ள படம் ‘தண்டகன்’

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”

August 6, 2026

‘ஷம்பாலா’ வெற்றிக் கூட்டணியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு… சந்தீப் கிஷனின் சோஷியோ ஃபேண்டஸி திரைப்படம் ‘கரிகாலா’ – மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

August 6, 2026

‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

August 6, 2026

ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

August 6, 2026
கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

கார்த்தி – இயக்குநர் மோகன் ராஜா கூட்டணியில் புதிய திரைப்படம்

August 4, 2026

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் இசை வெளியீட்டு விழா!

August 4, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.