• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ‘ஸ்டார்’

by Tamil2daynews
May 12, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடும் கவினின் ‘ஸ்டார்’

 

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இளன் இயக்கத்தில், யுவன் இசையில், கவின் நடிப்பில் உருவான ‘ஸ்டார்’ திரைப்படம் ரசிகர்களின் ஆரவாரமான எதிர்பார்ப்பிற்கு இடையே உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இப்படத்தைக் காண முதல் நாள் முதல் காட்சிக்கு ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் திரண்டனர்.

எட்டு நிமிடத்திற்கு மேல் நீடிக்கும் உணர்வுபூர்வமான படத்தின் உச்சகட்ட காட்சி.. சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பதை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பி பாராட்டினர்.

‘தமிழ் சினிமாவில் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்ட நீளமான ( எட்டு நிமிடம் 21 வினாடி) கிளைமாக்ஸ் காட்சி இதுதான்’ என்று குறிப்பிட்டிருக்கும் படக்குழுவினர், இதற்காக உழைத்த ஒட்டுமொத்த படக் குழுவினருக்கும், இதனைக் குறிப்பிட்டு பாராட்டிய ரசிகர்களுக்கும், விமர்சகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறும் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் படத்தை திரையிடும் திரையரங்குகளில் எண்ணிக்கை இன்று முதல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ‘ஸ்டார்’ திரைப்படம் இன்று முதல் கூடுதலாக நூற்றெண்பது  (180) திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் கவினின் நடிப்பையும், யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையையும் வெகுவாக பாராட்டினர்.

இளன் இயக்கத்தில் கவின், லால், பிரீத்தி முகுந்தன் அதிதி பொஹங்கர், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

நேற்று வெளியான ‘ஸ்டார்’ திரைப்படம்- பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் கோடை விடுமுறைக்கு குடும்பங்களுடன் திரையரங்கிற்கு வருகை தந்து ரசிக்கும் படைப்பாக மாற்றம் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ‘ஸ்டார்’ திரைப்படத்தை  திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை  உயர்ந்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்து சினிமா ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும், திரையுலக வணிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
Previous Post

ஊடகத்துறை ஜாம்பவான்கள் உருவாக்கியுள்ள புதுமையான கதை சொல்லும் செயலியும் ஆடியோ OTTயுமான ரேடியோ ரூம்

Next Post

கார்த்தி பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்..!!

Next Post

கார்த்தி பிறந்தநாளை கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்..!!

Popular News

  • சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • லண்டனில் படமாக்கப்பட்ட ‘பூக்கி பொன்னம்மா’ ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’டோரதி’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி!

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

November 2, 2026

சிங்காரம் – விமர்சனம்

November 2, 2026

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

November 2, 2026

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

November 2, 2026
‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

November 2, 2026

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

November 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.