• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“தி வாரியர்” திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை மிகப்பெரும் விலைக்கு விற்பனையாகி பாலிவுட்டில் சாதனை புரிந்திருக்கிறது !

by Tamil2daynews
January 26, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

The Warrior Movie Whatsapp Status Video 2022 - FREE Download Videos For Status

இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் நடிகர்  ராம் பொத்தினேனி  நடிக்கும் “தி வாரியர்” திரைப்படம் பலவிதமான காரணங்களுக்காக மிகவும்  எதிர்பார்க்கப்படும்  படங்களுல் ஒன்றாக இருக்கிறது. தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நடிகரான ராம் பொத்தினேனி முதன்முறையாக தமிழின் பிரபல இயக்குனருடன் இணைந்துள்ளார், மேலும் இரு மொழிகளில் உருவாகும்  இந்த படம், கோலிவுட்டில் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை தரவுள்ளது.தற்போது, இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமை ரூ.16 கோடிக்கு விற்றுத் தீர்ந்துள்ளது என்கிற தகவல் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஆம், நீங்கள் சரியாகத்தான்  படித்தீர்கள், இது 16 கோடி ரூபாய் தான், இது ராம் பொதினேனி திரை வாழ்வில் ஒரு உச்சமான சாதனை.

RAPO 19: Ram Pothineni to start shooting for Lingusamy's bilingual film on July 12; Deets inside | Telugu Movie News - Times of India

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை சமீபத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் போலீஸ் அதிகாரியாக தோற்றமளிக்கும் ராம் பொதினேனி தனது போலீஸ் குழுவுடன் ஒரு முக்கியமான மிஷனுக்கு திட்டமிடுகிறார். தி வாரியர் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு அதிரடி விருந்தாக இருக்கும் என்று திரை வட்டாரங்கள் கூறுகின்றன.

Photos: RAPO19 Movie Opening - TeluguBulletin.com

இயக்குநர் லிங்குசாமி தனது ஆக்‌ஷன் எண்டர்டெயினர் படங்களுக்காக பெயர் பெற்றவர் என்பதாலும், நடிகர் ராம் சிறந்த படங்களை கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் இருப்பவர் என்பதாலும்,  இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கிறது.  கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், அக்ஷரா கவுடா ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும், ஆதி பினிசெட்டி வில்லனாகவும்  நடிக்கின்றனர்.

RAPO19: Uppena Fame Krithi Shetty To Share Screen Space With Ram Pothineni In N Lingusamy's Next - Filmibeat

Srinivasaa Silver Screen பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட  பட்ஜெட்டில் தயாரிக்கும் தி வாரியர் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பவன்குமார் இப்படத்தை வழங்கவுள்ளார். சீடிமார் படத்தின் பிரமாண்ட  வெற்றியை தொடர்ந்து Srinivasaa Silver Screen  தி வாரியர் படமும் மிகப்பெரிய ஹிட்டாகும் என நம்புகிறது. இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.

Tags: KRITHI SHETTYLingusamyRAPO19
Previous Post

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் பிரபுதேவாவின் ‘ரேக்ளா’

Next Post

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் நடிகை அஞ்சலி…

Next Post

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் நடிகை அஞ்சலி...

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.