• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“வாரியர்” படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபல வசனகர்த்தா..!

by Tamil2daynews
July 16, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
“வாரியர்” படத்தின் மூலம்  நடிகராக அறிமுகமான பிரபல வசனகர்த்தா..!

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இயக்குனர் என். லிங்குசாமியின் ‘வாரியர்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். படம் வரும்வரை அச்செய்தியை வெளிப்படுத்தாமலேயே வைத்திருந்தேன். நேற்று திரையரங்குகளில் ‘வாரியர்’ படம் பார்த்த முகநூல் நண்பர்கள் பலரும் வாட்ஸ் ஆப்,, மெசஞ்சர் மூலம் வாழ்த்துக்களை அனுப்பி வருகின்றனர். அனைவருக்கும் நன்றி.

எனக்குள் ஒரு நடிகனைப் பார்த்த  இயக்குனர் நண்பர் லிங்குசாமிக்கு என் பிரத்யேக நன்றி. தயக்கத்துடன்தான் நடிக்கத் துவங்கினேன். நடிகருக்கான திரைத்தோற்றம் –  screen presence – நன்றாக இருக்கிறது என்று நாயகன் ராம் கூறியது நம்பிக்கை அளித்தது. வில்லனாக நடித்த ஆதி அவருடன் நடித்த காட்சியில் சில டிப்ஸ்களைக் கொடுத்தார்.

பொதுவாகக் காட்சிகளைப் படமாக்கும் முன் ஒரு வசனகர்த்தாவாக நான் போய் நடிகர்களுக்குக் காட்சிகளை விளக்கி வசன உச்சரிப்பு கூறி  பயிற்சி அளிப்பது வழக்கம். ஆனால் நானே ஒரு நடிகனாக கேமரா முன் நின்றதும் வார்த்தைகள் சரளமாக வராமல் தந்தி அடித்தன.

இணை, உதவி இயக்குநர்கள் அனைவருமே நண்பர்கள். கிண்டலடித்துக்கொண்டே உற்சாகத்தையும் கொடுத்தார்கள். நண்பரே இயக்குனர் என்பதால் டென்ஷன் ஆகாமல் இருந்தார். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நடித்தேன்.

முதல் ஷாட் நடித்து முடித்ததும் கட் சொல்லிவிட்டு ‘குட்’ என்று கைகொடுத்தார்   லிங்குசாமி . அது நண்பராகவா? இயக்குனராகவா? என்று தெரியவில்லை. ‘உண்மையிலேயே நல்லா பண்றீங்க’… என்றார். நம்பிக்கை வந்தது. இப்படியாக ஒரு நடிகன் எனக்குள் இருந்து பிறந்திருக்கிறான். படம் பார்த்துவிட்டு நீங்களும் உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர்  சூர்யா நடிக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்திலும், ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் ‘பீச்’ படத்திலும் நடித்து வருகிறேன்.
இது ஒரு புதிய பாதை…. புதிய பயணம்… வேறொரு மனிதனாக வாழும் அனுபவம் நன்றாகத்தான் இருக்கிறது. கூடு விட்டுக் கூடு பாயும் அனுபவம் இது. தமிழ் தெலுங்கு இரு  மொழிகளிலும் ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் ஒரு மருத்துவராக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
‘வாழ்க்கை ஒரு நாடகமேடை நாம் அதன் பாத்திரங்கள்’ என்ற ஷேக்ஸ்பியர் வாசகத்தை   இன்று நினைத்துப் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது.
அன்புடன்,
பிருந்தா சாரதி
Previous Post

“கார்கி” விமர்சனம்

Next Post

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்  “கனா காணும் காலங்கள்”  தொடருக்காக,  இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆந்தம்  பாடல்,  சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது. 

Next Post

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்  “கனா காணும் காலங்கள்”  தொடருக்காக,  இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆந்தம்  பாடல்,  சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ளது. 

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

    0 shares
    Share 0 Tweet 0
  • மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

July 27, 2026
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

July 27, 2026

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

July 27, 2026

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.