குற்றவாளியாக நிற்கும் தனது தந்தையை காப்பாற்ற ஒரு பெண் பிள்ளையாக சாய் பல்லவி போராடும் கதை தான் இந்த கார்கி.
ஒரு அப்பா அம்மாவுடன் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழும் குடும்பம் தான் சாய்பல்லவி குடும்பம்.சாய் பல்லவி ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்ற அவரது அம்மாவோ வீட்டில் இட்லி தோசை மாவு வியாபாரம் நடத்தி பிறப்பே நடத்திக் கொண்டிருக்கின்றனர் சாய் பல்லவி அப்பா சிவாஜி அருகிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து கொண்டு இருப்பார்.

“டான்ஸ் குயின்” என்று அனைவராலும் அழைக்கப்பட்ட சாய் பல்லவி இனிமே “ஆக்டிங் குயின்” அப்டின்னு சொல்லலாம் அந்த அளவுக்கு நடிப்புல பிரமாதமா பின்னி எடுத்திருக்கிறார்.
அவருடைய முக பாவனைகளாகட்டும் பெர்பாமென்ஸ் ஆகட்டும் அங்கங்க கை தட்ட வைக்கிறது .இவரை விட்டா இந்த கதைக்கு வேற யாரும் பொருந்த மாட்டாங்கன்னு தோணுது.

வழக்கறிஞராக வரும் காளி வெங்கட் பகுதி நேர மருந்து கடைகளில் வேலை செய்யும் காளி வெங்கட் ஒரு பெரிய வக்கீல் இடம் ஜூனியர் ஆக இருக்கிறார் அவர் எப்படியாவது ஒரு வழக்கில் வென்று விட வேண்டும் என்று சாய் பல்லவி குடும்ப வழக்கை எடுத்து தனது பாத்திரத்தை அவரும் நிறைவாக செய்திருக்கிறார்.
நீதிபதியாக நடித்திருக்கும் திருநங்கை சுதா இனிமேல் உங்களுக்கு தமிழ் சினிமாவில் நிறைய பட வாய்ப்புகள் காத்திருக்கிறது.

இயக்குனரின் முத்திரை என்றால் இந்த படத்தின் ஒரு காட்சியை சொல்லலாம் ஒரு பெண் பிள்ளையாக நின்று, வென்று தனது தங்கைக்கு சடங்கு நடத்தி முடிக்கும் அந்த காட்சிதான் இயக்குனர் வேற லெவல்.
பெண்களைப் பெற்ற பெற்றோர்களே தன் மகள் அருகில் உள்ள வீட்டாரிடம் பழகுகிறாள் என்பதற்காக விடாதீர்கள் குட் டச் எது பேட் டச் எதுவென்று தெள்ளத் தெளிவாக சொல்லிக் கொடுக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் கட்டாயம்.