• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’

by Tamil2daynews
July 13, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’

 

சென்னை, ஜூலை 12: 2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பான்-இந்திய  திரைப்படமாக, இந்திய பாக்ஸ் ஆபிஸை அதிரவைத்த பிளாக்பஸ்டர் “விக்ரம்” திரைப்படம், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடி பிரீமியர் மூலம் பல சாதனைகளை முறியடித்து, பம்பர் ஓப்பனிங்கை பதிவுசெய்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளிலும் மிகப்பெரிய சாதனைகளை முறியடித்ததாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீடுகளில் ஒன்றான “விக்ரம்” தனது பிளாக்பஸ்டர் ஓட்டத்தை ஓடிடியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ரசிகர்கள் இந்த ஓடிடி ரிலீஸை உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் கொண்டாடுகிறார்கள். மெகா ஆக்‌ஷன் திரைப்படத்திலிருந்து அவர்களுக்குப் பிடித்த சிறந்த  தருணங்களை மீண்டும் அனுபவிக்க அவர்களுக்கு அருமையான வாய்ப்பு இது.

கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்து இயக்கத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற கூடுதல் மொழிகளிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் திரையிடப்பட்டுள்ளது. இது அந்தந்த மொழி பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கமல்ஹாசனின் அசத்தலான தோற்றம் மற்றும் மனதைக் கவரும் சண்டை காட்சிகளுடன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சூர்யா போன்ற பன்முக நடிகர்களின் நடிப்பு, என  ஜாம்பவான்கள் ஒன்றாக திரையைப் பகிர்ந்து கொள்வதைக் கண்டு, ரசிகர்கள் பரவசமடைந்தனர். கூடுதலாக, அற்புதமான கதைசொல்லல் மற்றும் ஆக்சன் காட்சிகள் ஒவ்வொரு பிரேமிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “விக்ரம்” திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள்  வெகு ஆர்வமாக உள்ளனர்.  சிறந்த ஆடியோ-விஷுவல் தரம், திரையில் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்களைப் பார்க்கும் சிறந்த காட்சி அனுபவத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்குகிறது.
நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் கூறுகையில்..

விக்ரம் மீது நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பொழியும் அன்பும் பாசமும் இதயத்தை தொடுகிறது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் தான் விக்ரம் உருவாக்கப்பட்டது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதை  ஒவ்வொரு பார்வையாளர்களின் வீடுகளிலும் கைகளிலும் கொண்டு சேர்த்துள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கு தேசிய அளவில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று இதுவரையிலான, சாதனைகளை இப்படம் முறியடித்து வருவது, கொண்டாட்ட தருணமாகும். ஒட்டுமொத்த விக்ரம் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்.

டிஸ்னி ஸ்டார், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் & HSM என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்கின் கண்டெண்ட் ஹெட் கௌரவ் பானர்ஜி கூறுகையில்.., 

உலகெங்கிலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை வெற்றிக்குப் பிறகு, டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் விக்ரம் படத்திற்கு கிடைத்து வரும் அற்புதமான வரவேற்பு எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பார்வையாளர்கள் படத்தின் ஒவ்வொரு தருணத்தையும் தனித்தனியே கொண்டாடி,  பாராட்டி வருகின்றனர். இப்படம் தேசிய அளவில் ஓடிடி தளத்தில் மிகப்பெரிய  வெளியீடாக அமைந்தது. கமல்ஹாசன் போன்ற ஒரு நட்சத்திரம் மீது பார்வையாளர்கள் இதயத்தில் வைத்திருக்கும் உண்மையான அன்புக்கு இதுவே சாட்சி. விக்ரம் படத்தினை இன்னும் அதிகமான பார்வையாளர்களுக்கு டிஜிட்டல் முறையில் கொண்டு செல்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும். இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் முறையை மாற்றியுள்ளது. ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு வரை, இந்தியாவில் அதிக அளவிலான பொழுதுபோக்குடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் இது வழங்குகிறது.
Previous Post

ஓடிடி தளத்தில் வெளியாகும் மாமனிதன்

Next Post

நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’

Next Post

நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

    0 shares
    Share 0 Tweet 0
  • மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

July 27, 2026
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

July 27, 2026

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

July 27, 2026

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.