• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’

by Tamil2daynews
July 13, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’

 

ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’, இன்று காலை (ஜூலை 12, 2022) எளிமையான பூஜையுடன்  துவங்கப்பட்டது. ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும், நடிகை நயன்தாராவின் 75வது படமாக இப்படம் உருவாகிறது.

லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவின் உடைய இந்த  திரைப்பயணத்தில், அவர் மிக கடின உழைப்பினாலும் மற்றும் திறமை மிகு நடிப்பினாலும்,  தன்னை மிகச்சிறந்த நடிகையாக திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக  ஜெட் வேகத்தில்  முன்னேறியுள்ளார். அவரது அற்புதமான நடிப்பு மற்றும் அவர் ஏற்று நடிக்கும் வலுவான கதாபாத்திரங்களின் மூலமாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்துள்ளார்.
நடிகை நயன்தாரா இப்போது தனது மைல்கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், இந்த “லேடி சூப்பர் ஸ்டார் 75” திரைப்படம் இன்று காலை சென்னையில் ஒரு எளிய பூஜையுடன் தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான நிலேஷ் கிருஷ்ணா கூறும்போது,
“எனது முதல் படத்தை ZEE Studios, Trident Arts ஆகிய இரண்டு புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கீழ் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததற்காக நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக, உணர்கிறேன். நாயகியை மையமாக வைத்து நகரும் இந்தக்  கதையில் நடிக்க லேடி சூப்பர் ஸ்டார் திருமதி நயன்தாரா ஒப்புக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்தது . இது அவரது 75வது படம் என்பதால், அவர் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை  காப்பாற்றுவதில் நான் மிகுந்த கவனத்துடன்  உள்ளேன். திரைப்படத் உருவாக்கத்தை கற்று தந்த எனது குரு, என் ஆன்மா இயக்குனர் ஷங்கர் அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் இணைந்தது  குறித்து ZEE Studios தென்னக தலைவர் திரு. அக்‌ஷய் கெஜ்ரிவால் கூறுகையில், “லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் இந்த மதிப்புமிக்க படத்தில் நாங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருபது ஆண்டுக்கு மேலாக திரைத்துறையில் பார்வையாளர்களை மகிழ்வித்து வரும் நயன்தாரா உடைய நடிப்பில் , திறமையான நிலேஷ் கிருஷ்ணாவால் இயக்கப்படும் இந்தத் திரைப்படத்தை வழங்குவது எங்களுக்கு பெருமை. Zee Studios ல், மக்களை மகிழ்விக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் சிறந்த கதைகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்.  இந்த படம் அதில் ஒரு சிறந்த  படியாக அமையும்.
“நயன்தாரா 75″ திரைப்படத்தில் தமிழ் திரைத்துறையின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் – தினேஷ் கிருஷ்ணன் (ஒளிப்பதிவு), ஜாக்கி (கலை), பிரவீன் ஆண்டனி (எடிட்டிங்), அனு வர்தன்-தினேஷ் மனோகரன் (ஆடை வடிவமைப்பு), சுரேன் & அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு), கபிலன் (பப்ளிசிட்டி டிசைனிங்) இணைந்துள்ளனர்.

இப்படத்தில் சத்யராஜ், ஜெய், ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Previous Post

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று புதிய சாதனை படைத்த ‘விக்ரம்’

Next Post

ஜீ 5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல், உலகம் முழுக்க திரையிடுகிறது !!

Next Post

ஜீ 5 தளம், இந்த ஆண்டின் மிகவும் கொண்டாடப்பட்ட தமிழ் குடும்ப பொழுதுபோக்கு படமான ‘வீட்ல விசேஷம்’ படத்தை, ஜூலை 15, 2022 முதல், உலகம் முழுக்க திரையிடுகிறது !!

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

    0 shares
    Share 0 Tweet 0
  • மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மலேசியாவில் “சொடக்கு” பட ஆடியோ – டிரைலர் வெளியீடு!

July 27, 2026

சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

July 27, 2026
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோ

July 27, 2026

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா?” புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘ பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ !

July 27, 2026

ஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்

July 24, 2026

“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா

July 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.