• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது!

by Tamil2daynews
March 25, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட டீசர் குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது!

 

மும்பையில் நடந்த புகழ்பெற்ற கிராண்ட் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான பாராட்டுகளை டீசர் பெற்றுள்ளது. இந்த பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

நடிகர் சூர்யாவின் ஈர்க்கும் திரை இருப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் வசீகரிக்கும் பின்னணி இசையும், அசத்தலான காட்சியமைப்பும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கூடுதலாக, ’அனிமல்’ படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோலின் வலுவான நடிப்பும் படத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது. டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1.8 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.Kanguva Teaser Out: Suriya and Bobby Deol Clash in High-Octane Historical Drama | LatestLY

சிவா இயக்கத்தில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் ‘கங்குவா’ படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். மிலன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் எடிட்டராக பணியாற்றினார். சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். விவேகா மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சவுண்ட் அண்ட் விஷன் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த லாரன்ஸ் விஷ்ணு ரெக்கார்டிங் இன்ஜினியர். அனு வர்தன் மற்றும் தட்ஷா பிள்ளை ஆகியோர் ராஜனுடன் இணைந்து ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். செரினாவும் குப்புசாமியும் ஒப்பனையை கவனித்திருக்க, ரஞ்சித் அம்பாடி சிறப்பு ஒப்பனையை கையாண்டுள்ளார். ஷோபி மற்றும் பிரேம் ரக்ஷித் படத்திற்கு நடன இயக்குநர்கள்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸின் வம்சி-பிரமோத் தயாரித்திருக்க நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Previous Post

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் வழங்கும், இயக்குநர் ஹேமநாதன் ஆர் இயக்கத்தில், மிர்ச்சி விஜய்-அஞ்சலி நாயர் நடித்திருக்கும் ’WIFE’ படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியாகியுள்ளது!

Next Post

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படமான “ஆபிரகாம் ஓஸ்லர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!

Next Post

இன்வெஸ்டிகேட்டிவ் த்ரில்லர் திரைப்படமான “ஆபிரகாம் ஓஸ்லர்” இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘The Last Customer’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘HIT 3’ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆருக்கு ‘வார்-2’ திரைப்படத்தின் அதிரடியான புதிய அறிவிப்பை பிறந்தநாள் பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிக்பாஸ் அர்ச்சனா : “வலுவான புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்!”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

யோகி பாபு – ரூக்ஸ் மீடியா கூட்டணியில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

May 20, 2025

”‘மையல்’ என் வாழ்வை மாற்றிய படம்”- நடிகர் சேது!

May 20, 2025

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

May 20, 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்‌ஷன் எபிக் ‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!

May 20, 2025

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

May 20, 2025

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

May 20, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.