• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

by Tamil2daynews
November 2, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்கும், இயக்குநர் பிரபு சாலமனின்  – கும்கி 2  படத்தின் முதல் சிங்கிள் பொத்தி பொத்தி உன்ன வச்சு பாடல் வெளியீடு.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில்,  இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “கும்கி 2” படத்திலிருந்து, “பொத்தி பொத்தி உன்ன வச்சு” எனும் முதல் சிங்கிள்  பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில், பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் “கும்கி”. 13 வருடங்களைக் கடந்தும், இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அப்படத்தின் மையத்தை வைத்து, இயக்குநர் பிரபு சாலமன் மீண்டும் கும்கி 2 படத்தை உருவாக்கி வருகிறார்.

ஒரு இளைஞன் மற்றும் ஓர் அற்புதமான யானை இடையேயான தூய்மையான, நிபந்தனையற்ற நட்பைப் பற்றியும், அன்பை பற்றியும் இப்படம்  பேசுகிறது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா மென்மையான மெலடி இசை மற்றும் மயக்கும் குரலில், பாடலாசிரியர் மோகன் ராஜின் அற்புத வரிகளில்,  நேற்று வெளியான “பொத்தி பொத்தி உன்ன வச்சு”  பாடல், ஒரு சிறுவனுக்கும் யானைக்குமான உறவை, அன்பை, அழகாக வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் எம். சுகுமார் அவர்களின்  கண்களை குளுமையாக்கும் காட்சிகளும், நிவாஸ் கே பிரசன்னாவின் சொக்க வைக்கும் இசை, யானையோடு விளையாடும் சிறுவனின் கள்ளம் கபடமற்ற அன்பு, இயற்கை எழில் கொஞ்சும்  காடு என, இப்பாடல் பார்த்தவுடன் மனதை பறிக்கிறது. வெளியான வேகத்தில் இப்பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் மதி எனும் அறிமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். காட்டிலும்,  யானையுடனும் வெகு துணிச்சலாக நடித்து முதல் படத்திலேயே கவர்ந்திழுக்கிறார். அவருடன் இப்படத்தில் ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெரடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

டாக்டர் ஜெயந்திலால் காடா (பென் ஸ்டுடியோஸ்) வழங்க, தவல் காடா தயாரிப்பில் உருவாகும் கும்கி 2, திரைப்படம் ரசிகர்களையும் புதிய தலைமுறையையும் கவரும் நோக்கில் விரைவில் திரைக்க்கு வரவுள்ளது.

தொழில்நுட்பக் குழு:
இயக்கம் – பிரபு சாலமன்

தயாரிப்பாளர்கள் – டாக்டர் ஜெயந்திலால் காடா, தவல் காடா
இசை – நிவாஸ் கே. பிரசன்னா
ஒளிப்பதிவு – எம். சுகுமார்
எடிட்டிங் – புவன்
கலை இயக்கம் – விஜய் தென்னரசு
சண்டை அமைப்பு – ஸ்டண்ட் சிவா
ஆடை அலங்காரம் – வி.பி. செந்தில் அழகன்
தயாரிப்பு நிர்வாகம் – ஜே. பிரபாகர்
ஸ்டில்ஸ் – சிவா
புரமோஷன் – சினிமாபையன்
மக்கள் தொடர்பு  – யுவராஜ்
Link – https://www.youtube.com/watch?v=hqUBThejZk8
Previous Post

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் உதயநிதி – மான் கறி” விவகாரம் – விஸ்வரூபம் எடுக்கும் சர்ச்சை..! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • Paramapatham Villaiyattu Movie Stills

    0 shares
    Share 0 Tweet 0
  • கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.