நடிகர் எஸ்ஜே சூர்யா, மாநாடு படத்தின்மூலம் அதிகமான பாராட்டிற்கு உள்ளாகியுள்ளார்.தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். வில்லனாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.அடுத்ததாக விஷால் 33 படத்திலும் வில்லனாக கமிட்டாகியுள்ளார்.நடிகர் எஸ்ஜே சூர்யா டைரக்டராக அறிமுகமாகி, குஷி, வாலி படங்களின்மூலம் சிறப்பான டைரக்டராக அறியப்பட்டுள்ளார். மற்ற நடிகர்களை வைத்து முதலில் படங்களை இயக்கிய இவர், அடுத்ததாக தானே நாயகனாக நடித்து படங்களை இயக்கினார்.தொடர்ந்து சில காலங்கள் இடைவெளி விட்ட எஸ்ஜே சூர்யா, மீண்டும் இறைவி, மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களின்மூலம் கவனத்தை ஈர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் அனைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியான சிம்புவின் மாநாடு படத்தில் இவர் வில்லனாக நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்தப் படம் டைம் லூப் பாணியில் எடுக்கப்பட்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை படம் கொடுத்தது.இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் எஸ்ஜே சூர்யா. அடுத்ததாக விஷால்33 படத்தில் வில்லனாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கேயுரிய குறும்புடன் ட்வீட் செய்துள்ளார்.

வாழ்த்துக்கள் திரு எஸ் ஜே சூர்யா அவர்களே…