• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஈழத்தில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.

by Tamil2daynews
July 25, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஈழத்தில் உருவாகியிருக்கும் “அந்தோனி” திரைப்படத்தின் டப்பிங் பணிகள் ஆரம்பம்.

 

ஓசை பிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தின் தயாரிப்பில், கயல் வின்சன்ட் மற்றும் TJ.பானு இணைந்து நடிக்கும் “அந்தோனி” என்கிற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த மார்ச் மாதம் பூஜையுடன் ஆரம்பமாகி இலங்கை – யாழ்ப்பாணத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது டப்பிங் பணிகள் ஆரம்பித்திருப்பதாக படக்குழுவினர் அறியத்தருகின்றனர்.

அந்தோனி திரைப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இரு இளம் கலைஞர்கள் இணைந்து இயக்குகின்றனர். ஓசை பிலிம்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் கலைவளரி சக ரமணா மற்றும் சுகந்தினி ரமணதாஸ் அவர்கள் இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றனர். திரு.இரமணன் அவர்கள் இத்திரைப்படத்தில் இணை இயக்குனராகவும் பணிபுரிகின்றார். மற்றும் இணை தயாரிப்பாளர்களாக  விஜயன் பாலசிங்கம் (விஜய் பிலிம்ஸ்) , சிறீஸ்கந்தராஜா (ட்ரிம்லைன் புரடக்‌ஷன்ஸ்) ஆகியோர் இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.
கயல் திரைப்பட நடிகர் “கயல் வின்சன்ட்” அவர்களும், சினிமா உலகில் தனக்கென தனி இடத்தினை பிடித்து, மிக குறைந்த அளவில் சிறப்பான கதையம்சங்களை கொண்ட கதைகளை தெரிந்து நடித்து வரும் காதலிக்க நேரமில்லை, வாழ், போர், மாடர்ன் லவ், இமைகள், கதாநாயகியான T.J.பானு, நடிகர் அருள்தாஸ், குணச்சித்திர நடிகர் நிழல்கள் ரவி, மற்றும்  இலங்கையை சேர்ந்த நடிகர் சுதர்சன் ரவீந்திரன், மற்றும் நடிகை செளமி, ஆண்டவன் கட்டளை அரவிந்தன், இதயராஜ், யசிதரன், தர்ஷிபிரியா, ஷாமிலா, சாந்தா, சர்மிளா, வசந்த சீலன், போன்றோரும் எமது தமிழ்நாட்டு நடிகர்கள் பலரும் இணைந்து திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பொருட்செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த திரைப்படத்தை ஒளிப்பதிவாளர் ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கின்றார். சித்தா மற்றும் சென்னை சிற்றி கேங்ஸ்டர் போன்ற திரைப்பங்களின் படத்தொகுப்பாளர் சுரேஷ் A.பிரசாத் படத்தொகுப்பு பணியை செய்கின்றார். கலை இயக்குனராக கலா மோகன் அவர்களும், ஆடை வடிவமைப்பாளராக தரங்கனி அவர்களும், ஒப்பனை கலைவாணி மற்றும் அகல் சகி ஆகியோரும் பணியாற்றியிருக்கின்றனர்.
இலங்கையில் வெளிவந்த சினிமா திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு தனித்தன்மை கொண்ட எமது மண் சார்ந்த சினிமாவை எடுத்து காட்டுகின்ற திரைப்படமாக இந்த அந்தோனி அமையும் என்பதால், இத் திரைப்படம் ஐரோப்பிய அளவில் உலகத்தமிழ் மக்கள் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணியிருக்கின்றது என திரைப்படக்குழு அறியத்தருகின்றனர்.

தற்போது Post Production பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில்,  நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

நடிகர் வெற்றி நடிக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் ‘படத்தின் இசை வெளியீடு

Next Post

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘காந்தாரா: சாப்டர் 1 ‘ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

Next Post

ஹோம்பாலே ஃபிலிம்ஸின் 'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

October 17, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

October 17, 2026

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

October 17, 2026

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

October 17, 2026

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

October 17, 2026

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

October 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.