• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“பிண்டு கி பப்பி” என்ற திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் “கிஸ் கிஸ் கிஸிக்” என்ற பெயரில் வெளியாகிறது!!

by Tamil2daynews
March 11, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“பிண்டு கி பப்பி” என்ற திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் “கிஸ் கிஸ் கிஸிக்” என்ற பெயரில் வெளியாகிறது!! 

 

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள,  இந்தி மொழி, பொழுதுபோக்கு படமான  “பிண்டு கி பப்பி” இப்போது தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் “கிஸ் கிஸ் கிஸிக்” என்ற பெயரில் மார்ச் 21 ஆம் தேதி இந்தி பதிப்புடன் இணைந்து வெளியாகிறது.
புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடுகிறது, மேலும் இப்படத்தை மிகப்பெரிய  அளவில், அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் மார்ச் 8 ஆம் தேதி வெளியானது.
காதல், நகைச்சுவை மற்றும் அதிரடி நிறைந்த ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமான  “பிண்டு கி பப்பி”  கவர்ச்சிமிகு இளைஞனான பிண்டு வாழ்வில் ஏற்படும் காதல் மற்றும் எதிர்பாராத திருப்பங்களைச் சொல்கிறது.  அவன்  ஒரு உற்சாகமான இளம் பெண்ணைச் சந்திக்கையில், அவன் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. ஒரு முழுமையான என்டர்டெயினராக அனைத்து அம்சங்களுடன் கூடிய காமெடிப் படமாக, இப்படம்   பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும்.
தயாரிப்பாளர் விதி ஆச்சார்யா கூறியதாவது.., “பிண்டு கி பப்பி” படத்தை உருவாக்கியதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது ஒரு அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினரை ஒன்றிணைத்து உருவான திரைப்படம், மேலும் நாங்கள் உருவாக்கிய மாயாஜாலத்தை திரையில் பார்வையாளர்கள் அனுபவிப்பதைக் காண நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.
இத்திரைப்படத்தில் சுஷாந்த், ஜான்யா ஜோஷி மற்றும் விதி, விஜய் ராஸ், முரளி ஷர்மா, சுனில் பால், அலி அஸ்கர், அஜய் ஜாதவ், பூஜா பானர்ஜி, அதிதி சன்வால், ரியா எஸ். சோனி, ஊர்வசி சௌஹான், பியூமோரி மேதா தாஸ், முக்ஷ்வர் மேத்தா தாஸ் மற்றும் கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
விதி ஆச்சார்யா (V2S Production) தயாரிப்பில், ஷிவ் ஹரே எழுதி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், மார்ச் 21, 2025 அன்று பிரமாண்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
https://youtu.be/w82XH0WGbjY?si=jVk8UI81ykmNHIsf
Previous Post

ரிலீசுக்கு தயாரான ராஜபுத்திரன் …

Next Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்

Next Post

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட பரத் நடிக்கும் 'காளிதாஸ் 2' படத்தின் பர்ஸ்ட் லுக்

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.