• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

இம்மார்ட்டல் – விமர்சனம்

by Tamil2daynews
September 5, 2026
in விமர்சனம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
இம்மார்ட்டல் – விமர்சனம் 

இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் கயாடு லோஹர் நடிப்பில் வெளியான ‘இம்மார்ட்டல்’ (Immortal) திரைப்படம் ஒரு பேண்டஸி, ஹாரர் மற்றும் சர்வைவல் த்ரில்லர் வகைப் படம்.

சென்னையில் பிரிண்டிங் பிரஸில் வேலை செய்யும் ஜி.வி. பிரகாஷ் குமார் (மகி), புதிய வீடு தேடும்போது கயாடு லோஹரை (சிந்து) சந்திக்கிறார். நட்சத்திர விடுதி போன்ற அவரது வீட்டிலேயே ஜி.வி. பிரகாஷ் தங்குகிறார். அழகிய பெண்ணால் ஈர்க்கப்பட்டு அங்கு தங்கும் அவர், எதிர்பாராத வாம்பயர் ஆபத்தில் சிக்குகிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

1000 வருடங்களுக்கு முன் ஒரு தம்பதி… மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஒரு மூதாட்டி பிரசவம் பார்க்கிறார். குழந்தை பிறந்ததும் அதைப் பார்த்து அம்மாவே பயப்படுகிறார். இது சாதாரண குழந்தை இல்லை என பிரசவம் பார்த்த அந்த மூதாட்டி வேறு பயமுறுத்துகிறார். அந்தக் குழந்தையை ஒரு மலை உச்சியில் விட்டு விடுகிறார்கள். இந்த சீனை இங்கேயே கட் பண்ணி 2026 க்கு கதை நகருது.

நாயகன் சென்னையில் தனது மாமாவின் பிரிண்ட்டிங்க் பிரஸ்சில் வேலை செய்கிறான். தங்குவதற்கு வாடகை வீடு பார்க்கிறான். தனி வீடாக வாடகைக்குப் போனால் செலவு அதிகம் ஆகும், அதனால் 5 பேர் சேர்ந்து ஒரு வீட்டை ஷேர் பண்ணி ஷேர் ஆட்டோ போல் பண்ணிக்கிட்டா செலவு குறையும் என்று நினைக்கிறான்.

தேடி வந்த தேவதை மாதிரி நாயகி நாயகனுக்கு போன் செய்கிறாள். நான் தங்கி இருக்கும் வீட்டில் ஷேரிங்க் பார்ட்னராக வந்து தங்கிக்கொள்கிறீர்களா? என்று கேட்கிறாள். திண்ணையில் படுத்துக் கிடந்தவனுக்கு திடுக்னு வாழ்வு வந்த கதை தான்.

இலவசமா அருகம்புல் ஜூஸ் கிடைச்சாலே குடிப்பவன் கரும்பு ஜூஸ் கிடைச்சா வேணாம்னா சொல்வான்? ஓக்கே என்கிறான்.

வீட்டுக்கு வந்து பார்த்தா அது வீடு இல்லை, பங்களா. அதுக்கு 5,000 ரூபாய் தான் வாடகை என்றதும் நாயகனுக்கு செம குஷி.

நாயகியுடன் வீட்டில் தங்குகிறான். நாயகியைக் கவர அவ்வப்போது முயற்சிகள் செய்து வருகிறான். நாயகியும் நாயகனுக்கு நல்ல கம்பெனி தருகிறாள்.

நாயகன், நாயகி இருவரும் நட்பாகப் பழகி நெருக்கமாகும் போது நாயகனுக்கு ஒரு உண்மை தெரிய வருகிறது. நாயகி சாதாரண மனிதப் பெண் அல்ல. ஏதோ அமானுஷ்யம் அவளிடம் இருக்கிறது.

இது தெரிந்ததும் நாயகன் உஷாராகி அந்த வீட்டிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறான், முடியவில்லை. நாயகியின் கட்டுப்பாட்டில் அந்த வீடு இருக்கிறது என்பதை உணர்கிறான்.

இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித் திரைக்கதை.நாயகனாக ஜி.வி பிரகாஷ் குமார் பிரமாதமாக நடித்திருக்கிறார். இதுவரை இது போல் ஒரு நல்ல ரோல் அவருக்குக் கிடைக்க வில்லை என்றே சொல்லலாம்.

நாயகியாக கயாடு லோஹர் கிளாமர் கியூன் ஆக வருகிறார். நடிப்பும் அருமை. அவரது சிரிப்பும், டயலாக் டெலிவரியும் ஆண்ட்ரியாவை நினைவுபடுத்துகிறது. தமிழில் இவர் நடிக்க ஒப்பந்தமான முதல் படம் இதுதான் (ஆனால் சில படங்கள் முந்திக் கொண்டன. லொள்ளு சபா மாறன், டி.எம் கார்த்திக், குமார் நடராஜன், ஆதித்யா கதிர் ஆகியோர் காமெடி செய்கிறார்கள்.

2 பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார் சாம்.சி எஸ். ஓக்கே ரகம். பின்னணி இசை மிரட்டல் ரகம்.அருண் ராதா கிருஷ்ணனின் ஒளிப்பதிவு அட்டகாசம். நாயகியின் க்ளோசப் ஷாட்கள் அருமை. திகில் கிளப்பும் காட்சிகளும். வெல்டன் கேமரா ஒர்க் என சொல்ல வைக்கிறது.

எம் ராஜேஷின் எடிட்டிங்கில் படம் 131 நிமிடங்கள் ஓடுகிறது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா தான் இயக்கி இருக்கிறார்.

முதல் பாதி முழுக்க நாயகன், நாயகி ரொமான்சுக்கு முயற்சிக்கும் முன்னெடுப்புகள் என்பதால் ஜாலியாக நகர்கிறது. நாயகன் – நாயகி கெமிஸ்ட்ரியும் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

நாயகியின் அழகும், கிளாமரும் படத்துக்குப்பெரிய பிளஸ். அந்தக் கேரக்டரில் ஒரு மர்மம் இருக்கிறது என்று தெரிந்தபின் சுவராஸ்யம் கூடுகிறது.

மலையாளத்தில் ரிலீஸ் ஆகி மெகா ஹிட்டான லோகா சேப்டர் 1, ஜிவிபி நடித்த டார்லிங்க், ஜீவா நடித பிளாக் இந்த மூன்று படங்களின் கதை போலவா? இல்லை, வேறு மாதிரி கதையா? என்பதை இயக்குநர் கொண்டு போன விதம் அருமை.

ஹாரர் திரில்லர் படங்களுக்கே உரித்தான மிரட்டும் பின்னணி இசை சாம்.சி.எஸ் கச்சிதமாக உருவாக்கி இருக்கிறார்.

இண்ட்டர்வெல் பிளாக்கில் வரும் ட்விஸ்ட்டும், க்ளைமாக்சும் குட். ஒரு சில லாஜிக் மிஸ்டேக் படத்தில் இருந்தாலும் படத்தின் முதல் பாதியும் இரண்டாம் பாதியும் விறுவிறு சரசரவென சீன்கள் நகர்வதால் அந்த குறைகளை கண்டுபிடிக்க முடிவது கடினம்.

கயாடு லோகரின் அழகில் பாதி படம் நகர்ந்தாலும் பின்பாதியில் வாம் பயர் மிரட்டலால் படம் நிமிர்ந்து நிற்கிறது.

மொத்தத்தில் இளசுகளுக்கும் பெருசுகளுக்கும் ஏற்றப்படம்.
Previous Post

I”am Game – விமர்சனம்

Next Post

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்

Next Post

கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; 'லுக் டெஸ்ட்' காட்சிகள் வைரல்

Popular News

  • “உயிர் தமிழுக்கு” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்- சாப்டர்1’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஃபைண்டர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு நல்ல தமிழ் படத்தை கெடுத்த பவண்கல்யாண்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.