• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

by Tamil2daynews
August 25, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இயக்குநராக மீண்டும் களம் இறங்கும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்

‘கே ஜி எஃப்’ , ‘ சலார்’ போன்ற பிரம்மாண்டமான வெற்றி படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ‘வீர சந்திரஹாசா’ எனும் திரைப்படத்தினை இயக்குகிறார். இதன் மூலம் மீண்டும் அவர் இயக்குநராக களமிறங்கி இருக்கிறார்.  இது அவரது இயக்கத்தில் உருவாகும் ஆறாவது திரைப்படமாகும். அத்துடன் இந்த திரைப்படம் அவரது கலையுலக பயணத்தில் முக்கிய அடையாளமாகவும் இருக்கும்.

இயக்குநர் ரவி பஸ்ரூரின் திரைப்படங்கள் அவற்றின் புதுமையான மற்றும் யதார்த்தமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்றவை. மேலும் அவரது இயக்கத்தில் உருவாகும் ‘வீர சந்திரஹாசா’ –  பாரம்பரியத்தை குறிப்பிடத்தக்க வகையில் அதன் எல்லைகளை மேலும் விரிவடைய செய்யும் என்கிறார்.

‘வீர சந்திரஹாசா’வை வேறு படைப்புகளிலிருந்து வித்தியாசப்படுத்துவது கர்நாடகாவின் பழைமையான மற்றும் மரியாதைக்குரிய கலை வடிவமான யக்ஷகானாவின் அற்புதமான விளக்க படைப்பாகும்.  பன்னிரண்டு ஆண்டுகளாக ரவி பஸ்ரூர் யக்ஷகானாவை வெள்ளி திரைக்கு கொண்டுவர வேண்டும் என்ற கனவினை கொண்டிருந்தார்.
இந்த திரைப்படம் அந்த லட்சியத்தின் பலனை பிரதிபலிக்கிறது. இந்த முயற்சி படைப்பு ரீதியிலான பாய்ச்சல் மட்டுமல்ல… ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மைல்கல் என்றும் சொல்லலாம்.  இந்த படைப்பில் கணிசமான வளங்களை முதலீடு செய்வதன் மூலம், இந்த செழுமை மிக்க கலை வடிவத்தை பாதுகாத்து கொண்டாடுவதற்கு இயக்குநரான ரவி பஸ்ரூர் மிகுந்த துணிச்சலையும், அர்ப்பணிப்பையும் வழங்கி உள்ளார்.

யக்ஷகானாவை சினிமா மொழியில் மாற்றியமைக்கும் முயற்சி என்பது துணிச்சலானது மற்றும் பாராட்டுக்குரியது. இதற்கு நிதி முதலீடு மட்டுமல்ல… கலை வடிவத்தின் நுணுக்கங்களை பற்றிய ஆழமான  புரிதலையும், அதன் அதிர்வை திரையில் மொழிபெயர்க்கும் திறனும் தேவை. இத்தகைய முயற்சி சவால்கள் நிறைந்தது. ஆனால் இது உலகளாவிய தளத்தில் யக்ஷகானா மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்களின் பரந்துபட்ட பாராட்டிற்கு வழி வகுக்கிறது.

புதிய மற்றும் ஆக்கபூர்வமான வழிகளில் அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை ஆராயவும், வெளிப்படுத்தவும், மற்றவர்களை ஊக்குவிக்கவும் அக்கலையின் புதுமை மற்றும் ஆற்றலுக்காக.. இந்த அற்புதமான அணுகுமுறையுடன் தொடங்கப்பட இருக்கும் ‘வீர சந்திரஹாசா’ கொண்டாடப்பட வேண்டும்.

Previous Post

‘சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா

Next Post

கயாக் ஃபில்ம்ஸ் ஆஷிக் ஜோயல் இயக்கத்தில், EFL குளோபல் தயாரிப்பில், ‘மீண்டும் நம்பிக்கையை கண்டறிதல்: யீன் உதான் மூலம் பயணம்’

Next Post

கயாக் ஃபில்ம்ஸ் ஆஷிக் ஜோயல் இயக்கத்தில், EFL குளோபல் தயாரிப்பில், 'மீண்டும் நம்பிக்கையை கண்டறிதல்: யீன் உதான் மூலம் பயணம்'

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • 2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

October 17, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

October 17, 2026

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

October 17, 2026

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

October 17, 2026

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

October 17, 2026

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

October 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.