• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பிரைம் வீடியோ ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது

by Tamil2daynews
October 11, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பிரைம் வீடியோ ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது

 

இந்த ஒரிஜினல் தமிழ் தொடரானது, கார்த்திக் சுப்பராஜால் தொகுக்கப்பட்டு கல்யாண் சுப்ரமணியன் (இது ஒரு ஸ்டோன் பெஞ்ச் புரொடக்ஷன்) தயாரிப்பில் அசோக் வீரப்பன், பரத் முரளிதரன் மற்றும் கமலா அல்கெமிஸ் ஆகியோரின் இயக்கத்தில் கமலா அல்கெமிஸ் மற்றும் திவாகர் கமல் ஆகியோரால் உருவாக்கப்பட்டது

இந்தத் தொடரில் நவீன் சந்திரா, நந்தா, மனோஜ் பாரதிராஜா, முத்துக்குமார், ஸ்ரீந்தா, ஸ்ரீஜித் ரவி, சம்ரித், சூர்யா ராகவேஷ்வர், சூர்யகுமார், தருண், சாஷா பரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பிரைம் வீடியோவில் வெளியிடப்படும் இந்த முதல் தமிழ் டார்க்-ஹியூமர் த்ரில்லர் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் இந்தியா மற்றும் உலகம் முழுவதும், 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த சேவையில் பிரத்யேகமாக அக்டோபர் 18 முதல் தமிழில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது,
மும்பை, இந்தியா, 09, 2024 — இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, அதன் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரான  ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரின் மனதைக் கவரும் டிரெய்லரை இன்று வெளியிட்டது. கல்யாண் சுப்ரமணியன் (ஒரு ஸ்டோன்பெஞ்ச் புரொடக்‌ஷன்) தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subbaraj), தொகுத்த இந்த தமிழ் ஒரிஜினல் தொடர் அசோக் வீரப்பன், பரத் முரளீதரன் (Ashok Veerappan, Bharath Muralidharan) மற்றும் கமலா அல்கெமிஸ் இயக்கத்தில், கமலா அல்கெமிஸ் & திவாகர் கமல் (Kamala Alchemis & Dhivakar Kamal) ஆகியோரால் உருவாக்கப்பட்டது. எதிர் வரவிருக்கும் இந்த டார்க் ஹியூமர் த்ரில்லரில் நவீன் சந்திரா (Naveen Chandra), நந்தா (Nandha), மனோஜ் பாரதிராஜா (Manoj Bharathiraja), முத்துக்குமார் (Muthukumar), ஸ்ரீந்தா(Srinda), ஸ்ரீஜித் ரவி (Sreejith Ravi), சம்ரித் (Samrith), சூர்யா ராகவேஷ்வர் (Surya ragaveshwar), சூர்யகுமார்,(Surya kumar), தருண் மற்றும் சாஷா பரேன் (Tarun and Sasha Bharen) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளதை பெருமையோடு அறிவிக்கிறது..

Image2000 ஆண்டு கால மத்தியில் நடைபெறுவதாக அமைக்கப்பட்ட இந்த திரில்லர் கதைக் களம்.. நட்பை அதன் அனைத்து வடிவங்களிலும் கொண்டாடுகிறது. கடினமான வாய்ப்புகளினூடே லாகவமாக செல்லவும், சிக்கலான மர்மங்களை கட்டவிழ்க்கவும், தங்களின் மிக மோசமான தேர்வுகளை எதிர்கொள்ளவும் வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்படும் நான்கு பள்ளி நண்பர்களின் வாழ்க்கைப் பயணத்தை இது பின்தொடருகிறது.
இந்தியா மற்றும், உலகம் முழுவதும் 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழிலும் மற்றும் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டும் அக்டோபர் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக ஸ்ட்ரீம் செய்யக் கிடைக்கும். இந்த ஒன்பது-எபிசோடுகளைக் கொண்ட த்ரில்லர் பிரைம் மெம்பர்ஷிப்பில் சமீபத்திய சேர்க்கையாகும். இந்தியாவில் உள்ள பிரைம் உறுப்பினர்கள், ஒரு உறுப்பினருக்கான தொகையாக ஆண்டுக்கு ₹1499 மட்டும் செலுத்தி, சேமிப்பு, வசதி மற்றும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங் களையும் அனுபவித்து மகிழலாம் நான்கு பள்ளி மாணவ நண்பர்கள் -கில்லி, இறை, சாண்டி மற்றும் பாலா – தங்களின் கவனக்குறைவால் ஒரு புதிரான சூழலில் சிக்கி, அதிலிருந்து விடுபட போராடும் நிகழ்வுகளின் ஒரு பார்வையை.. இந்த டிரெய்லர் காட்சிப்படுத்துகிறது. காவல்துறையினர் மற்றும் ரௌடி கும்பல்களால் துரத்தப்படும் அவர்கள் தப்பிச்செல்லும் பாதையில் ஒரு மர்மமான மற்றும் புத்திசாலித்தனமான கதாபாத்திரம், லியோ (நவீன் சந்திரா) வை சந்திக்க நேரும் போது சற்றும் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்ப்படுகிறது, அவரது கணிக்க முடியாத வித்தியாசமான ஒவ்வொரு செயல்பாடுகளின் போதும், அதிரடி திருப்பங்கள் ஏற்ப்படுகின்றன. இதன் கதாபாத்திரங்கள் அனைவரும் கால அவகாசமின்றி நேரத்திற்கு எதிராக இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும் சோக நிகழ்வுகளை நகைச்சுவையாக சித்தரிக்கும் காட்சிகள் நிறைந்த, இந்த த்ரில்லர்… பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களின் மனதைக் கட்டிப்போட்டு, இருக்கையின் விளிம்பில் அமரவைக்கும் சாகசங்கள் நிறைந்த ஒன்றாகவும் இருப்பதற்கு உத்திரவாதம் அளிக்கிறது.நடிகர் நவீன் சந்திரா தனது கதாபாத்திரம் குறித்த தனது நுண்ணறிவை பகிர்ந்து கொண்டு கூறினார், “அதன் எதிர்பாரா திருப்பங்கள், தீவிரமான கதாபாத்திரங்களின் இயக்க ஆற்றல் மற்றும் அடுக்கடுக்காக வெளிப்படும் மர்மங்கள் நிறைந்த கதைக்களத்தைக் கொண்ட இந்தத் தொடர், சாகசம், டிராமா மற்றும் மர்மம் ஆகியவற்றின் சில்லிடவைக்கும் ஒரு அற்புதமான கலவையாகும். அனைவரையும் முழுமையாக கவர்ந்திழுக்கும் என் கதாபாத்திரம் கதைக்கு ஒரு உத்வேகத்தை அளித்து தொடர் முடியும் வரை முழுவதுமாக பார்வையாளர்களை கட்டிப்போட்டுவிடும். விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற இன்ஸ்பெக்டர் ரிஷியின் குறிப்பிடத்தக்க அமோக வெற்றிக்குப் பிறகு, பிரைம் வீடியோவுடன் மீண்டும் இணைந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நட்பு, ஆபத்து மற்றும் தன்னை அறிதலின் உணர்வுகள் நிறைந்த ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தொடரை அனைவரும் ஆழ்ந்து அனுபவிப்பதை காண நான் ஆவலோடு காத்திருக்கிறேன்!”

Previous Post

ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

Next Post

நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post

நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.