• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!

by Tamil2daynews
May 30, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தேஜா சஜ்ஜா நடிப்பில் மிராய் பட டீசர் வெளியாகியுள்ளது !!

 

இந்தியாவில் முதன்முறையாக ஒரு  அற்புத உலகத்தை பார்க்க தயாராகுங்கள்! சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா நடிக்கும், கார்த்திக் கட்டமனேனி இயக்கும், பீப்பிள் மீடியா ஃபேக்டரி வழங்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம் மிராய் டீசர் வெளியாகியுள்ளது, இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

ஹனுமான் படம் மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த தேஜா சஜ்ஜா, இப்போது அதைவிட மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்ட திரைப்படமான  “மிராய்” படத்தோடு வந்துள்ளார்.  பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில், TG விஷ்வபிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர்  தயாரிக்கும், இந்தப் படத்தை இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி இயக்கியுள்ளார். காட்சியமைப்பிலும், ஃபேண்டஸி கதைக்களத்திலும் பிரம்மாண்டத்திலும் அசத்தும்,
டீசர் இந்தியா முழுவதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

டீசரில் ஒரு முனிவரின் குரல், கலியுகக் களத்தில் பிறந்த கட்டுப்பாடற்ற சக்தியின் எழுச்சியைப் பற்றி முன்கூட்டியே அறிவிக்கிறது. அந்த இருண்ட சக்தி தான் தி பிளாக் ஸ்வார்ட் The Black Sword (மனோஜ் மாஞ்சு), மனித சக்திக்கு அப்பாற்பட்ட வல்லமை கொண்டவர், அழிவுக்கான பயணத்தை தொடங்குகிறார். ஆனால், இந்த முறை கடவுள்கள் அல்ல; அவர்களின் ஆயுதமே எதிர்விளைவு தருகிறது. அதுதான் மிராய்.

தேஜா ஒரு எளிய வீரராக அரங்கேற்றமாகிறார் — ஒரு மர்ம வாய்ந்த சக்தி மிக்க ஆயுதத்துடன், அதன் பலம் குறித்த கேள்விகளுடம் தனது பயணத்தை தொடங்குகிறார். இருளுக்கு எதிரான போரில் தன்னுடைய சக்தியை வலிமையை கண்டடைகிறார், நியாயத்திற்கு உண்மைக்கு ஆதரவாக அவர் எழும் தருணமே கதையின் மையம்.

இந்தியாவின் இளம் பான் இந்தியா நட்சத்திரமான தேஜா சஜ்ஜா, ஒரு சாதாரண மனிதனில் இருந்து சூப்பர் யோதாவாக மாறும் ஹீரோவாக வெளிப்படுகிறார். ரயிலின் மேலே  செய்யும் சாகசம்  உட்பட, பல உயிர் அபாயம் நிறைந்த சாகசங்களை  துணிவுடன் செய்து, அவர் ஒரு சக்திவாய்ந்த நட்சத்திரம் என்பதை நிரூபிக்கிறார்.

மனோஜ் மாஞ்சு ஒரு படு பயங்கர எதிர் நாயகனாக திகழ்கிறார். அவரது சக்தி வாய்ந்த நடிப்பு, ஒவ்வொரு காட்சியையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. ரிதிகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம் மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கார்த்திக் கட்டமனேனி இயக்குநராக மட்டுமல்ல,  மிரட்டலான உலகை உருவாக்கி, பரபரப்பான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். அவரது காட்சியை உருவாக்கும் திறமை, வித்தியாசமான கதாபாத்திரங்கள், அதிரடி சண்டைகள் — இவை அனைத்தும் திரைக்கதையை சிறப்பிக்கின்றன. டீசரின் கடைசி நிமிடத்தில், இராமர் வரும் தருணத்தில் குரங்குகள் தலைவணங்கும் காட்சி, நம்மை மயிர்க்கூச்செரிய வைக்கிறது.

கேமராவை கையாண்டுள்ள கார்த்திக், ஒவ்வொரு பிரேமையும் அற்புதமாகப் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் இசை அமைப்பாளர் கௌர ஹரி பின்னணி இசை, திரை அனுபவத்தை மேலோங்கச் செய்கிறது. மனிபாபு கரணம் வசனங்களை எழுதியிருக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்காலா கலை இயக்குநராக, சுஜித் குமார் கொல்லி நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளனர்.
கார்த்திகேயா 2 மற்றும் ஜாட் படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் தயாரிப்பில், மிராய் திரைப்படம் இந்திய அளவில் மற்றொரு பான் இந்திய பிரம்மாண்ட படைப்பாக உருவாகிறது. இப்படம் முற்றிலும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படுகிறது. வெறும் VFX பிரம்மாண்டமாக இல்லாமல் – மிராய் திரைப்படம் அத்தியாவசியமான, கட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டுகளில் எடுக்கப்படும் படங்களின் பிரமாண்டத்திற்கு இணையாக உள்ளது என்பதுதான் இதன் சிறப்பம்சம். உண்மையான சினிமா தாக்கத்திற்கு எப்போதும் பிளாக்பஸ்டர் செலவு தேவையில்லை, துணிச்சலான கற்பனை மற்றும் கூர்மையான செயல்படுத்தல் மட்டுமே தேவை என்பதற்கு  இது உதாரணமாக இருக்கும்.

இந்த டீசர் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ள “மிராய்” திரைப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் அதிரடியாக வெளியாகிறது. இந்த திரைப்படம் 8 வெவ்வேறு மொழிகளில் 2D மற்றும் 3D வடிவங்களில் உலகளவில் வெளியிடப்படும்.

நடிகர்கள்: சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு

தொழில்நுட்பக் குழு:
இயக்கம் : கார்த்திக் காட்டம்நேனி
தயாரிப்பாளர்: டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத்
பேனர்: பீப்பிள் மீடியா பேக்டரி
நிர்வாக தயாரிப்பாளர்: சுஜித் குமார் கொல்லி
இசை: கவுரா ஹரி
கலை இயக்குனர்: ஸ்ரீ நாகேந்திர தங்காலா எழுத்தாளர்: மணிபாபு கரணம்
எடிட்டர் – ஶ்ரீகர் பிரசாத்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஹேஷ்டேக் மீடியா

https://youtu.be/Uf6allM1yWc

Previous Post

‘குபேரா’ திரைப்படத்தின் மயக்கும் விதமான ட்ரான்ஸ் எனப்படும் சிறுமுன்னோட்டம் (Teaser) வெளியாகி சேகர் கம்முலாவின் சினிமா உலகத்திற்குள் ரசிகர்களை கொண்டு செல்வதுடன் ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது!

Next Post

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

Next Post

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE தமிழின் weekend-ஐ கலக்க வருது ‘சரிகமப’ & ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் ‘தி புட்டு – Dhe Puttu’ உணவகத்தின் கிளையை தொடங்கிய நடிகர் திலீப் – காவ்யா மாதவன் தம்பதிகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவ் பஹதூர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.