• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

by Tamil2daynews
July 15, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

 

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’  திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள ‘மாரீசன் ‘ திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா,  சித்தாரா, பி. எல். தேனப்பன்,  லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , ‘ஃபைவ் ஸ்டார் ‘ கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த  திரைப்படம் ஜூலை 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட ட்ரெய்லருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடத்தில் இருந்து பெரும் பேராதரவு கிடைத்து வருகிறது.

‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் கூட்டணி இணைந்திருப்பதாலும், இந்த படத்திற்கான ட்ரெய்லரில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்… அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம் பிடித்திருப்பதாலும்..படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடத்தில் எழுந்திருக்கிறது.

Previous Post

கதாநாயகன் கவின் நடிப்பில் “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படம் தொடக்கம்

Next Post

கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!

Next Post

கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘பெத்தி’ படத்திலிருந்து அவரது அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது!!

Popular News

  • மனதை வருடும் இசை ஆல்பம் –  என் மனமே.

    மனதை வருடும் இசை ஆல்பம் – என் மனமே.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்ஸ்மோர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Hi – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • டாக்ஸிக் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பான் இந்தியா நட்சத்திர முகமாக ஃபோர்ப்ஸ் இந்தியா அட்டை படத்தை அலங்கரிக்கும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

August 28, 2026

“ஏன் என்னை ஏதோ செய்தாய்” – பத்திரிகையாளர் சந்திப்பு !!

August 28, 2026

அமரம் -விமர்சனம்

August 28, 2026

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும் திரைப்படமா?

August 28, 2026

வேகமாக விறுவிறுப்பாக நடைபெறும் ‘அரசன்’ படப்பிடிப்பு!

August 28, 2026

டாக்ஸிக் – விமர்சனம்

August 28, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.