• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !

by Tamil2daynews
October 31, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !

 

அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு,  சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Imageஇதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது…
His Untamed Presence, Is Your Existential Crisis. #ToxicTheMovie — உலகளாவிய வெளியீடு 19-03-2026” என்று பதிவிட்டு வெளியீட்டு தேதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

படம் வெளியாகும் தேதி முக்கியமான பண்டிகை காலமாகும் — குடி பாட்வா(Gudi Padwa), உகாதி (Ugadi) மற்றும் பல பிராந்திய புத்தாண்டு கொண்டாட்டங்களுடன், அதனைத் தொடர்ந்து ஈத்  பண்டிகையும் வருவதால், பாக்ஸ் ஆபிஸில் நான்கு நாள் நீண்ட பண்டிகை வாய்ப்பு உருவாகியுள்ளது. KGF-க்குப் பிறகு யாஷ் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பல மடங்கு ஏற்படுத்தியுள்ளது.

கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் பண்டிகை சீசனில் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கத் தயாராகி வருகிறது.
Previous Post

புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் ‘அங்கம்மாள்’!

Next Post

ஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! 🔱 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Next Post

ஹனு மேன் உலகிலிருந்து… அடுத்த சக்தி எழுகிறது — மஹாகாளி! 🔱 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Popular News

  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • வரலாற்றில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் தமிழ்த் திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நவம்பர் 20-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகும் துல்கர் சல்மானின் ‘AOT’

    0 shares
    Share 0 Tweet 0
  • பெங்களூர் மெட்ரோவில் முதன்முறையாக ஒரு நட்சத்திர பிறந்தநாள் கொண்டாட்டம் – ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்களின் வரலாற்றுச் சாதனை !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.