தமிழ் சினிமா பார்க்கும் ரசிகர்கள் எத்தனையோ படங்களை பார்த்து கடந்து வந்துள்ளார்கள் அதில் ஒரு சில படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற உதாரணத்துடன் வந்திருக்கும் படம் பெருசு.
படத்தின் ஆரம்பத்திலேயே வைபவ் அப்பா ஒரு இளைஞன் பெண்கள் குளிப்பதை பார்ப்பதை தெரிந்து கோபமாக அறைந்துவிட்டு ஒழுங்காக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்து வீட்டிற்கு செல்கிறார்.
அந்த பிரச்சனை முடித்தால் தான் அப்பா இறந்ததையே வெளியே சொல்ல முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது வைபவ் அவருடைய அண்ணன் மற்றும் குடும்பத்தினருக்கு.
அந்த வெளிய சொல்ல முடியாத பிரச்சனையை தீர்த்தார்களா, அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியத்தை ஒழுங்காக செய்தார்களா என்பதே மீதிக்கதை.
பெருசு இப்படி ஒரு கதைக்களம் அதுவும் தமிழில் யோசித்ததே பெரிய விஷயம், அதையும் முடிந்த அளவிற்கு முகம் சுளிக்காத படி ஒரு குடும்பத்தை சுற்றியே சொன்ன விதம் சூப்பர்.
அதிலும் அந்த பிரச்சனையை தீர்க்க டாக்டர், கால்நடை மருத்துவர் ஏன் சாமியார் வரை செய்யும் கலாட்டா முதல் பாதி செம ரகளை, வைபவ் அம்மா, அண்ணி சாந்தினி, காதலி நிகாரிகா, நண்பர் பாலசரவணன் என எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
அதோடு தீபா, முனிஷ்காந்த், எல்லாத்தையும் ஒட்டு கேட்கும் பக்கத்துவிட்டு கமலாக்கா என அனைத்து கதாபாத்திரங்களும் செம யாதர்த்தம்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் குடும்பத்துடன் வந்தாலும் படம் பார்க்கும் அனைவரின் முகமும் சுளிக்காமல் இருக்கும் காட்சி அமைப்புகள் தான்.
நடிகர் வைபவ் அவரது அண்ணன் சுனில் இணைந்து நடித்திருக்கும் இப்படம் இருவரின் வாழ்க்கையிலுமே மறக்க முடியாத ஒரு படமாக அமையும்.