• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

by Tamil2daynews
August 12, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

 

இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் – உண்மையான உணர்ச்சிகள் – அதிரடியான சண்டைக் காட்சிகள்-  புதிரான மர்மம்-  ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது.

கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்… ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்.

நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான உலகத்தை நிலை நிறுத்த தொடங்கி, பின்னர் தபுவை ஒரு குறிப்பிடத்தக்க விதத்தில் அறிமுகப்படுத்துகிறது. அவர் ஒரு காரில் வந்து சிகரெட்டை பற்ற வைத்து.. உடனடியாக நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருகிறார். ஒரு உள்ளூர் ரவுடிக்கு அவர் விடுத்த கடுமையான எச்சரிக்கையும்… அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த ‘பளார்’ என்ற அறையும்… கௌரி ஹெக்டே அதிகாரத்தைத் தேடுபவர் அல்ல… அதை கோருபவள் என்பதை உடனடியாக பிரதிபலிக்கிறது.

அந்த கதாபாத்திரம் – ஒரு சக்தி வாய்ந்த அதிகாரியாக மட்டுமல்லாமல் முற்றிலும் அச்சம் ஏதும் இல்லாத மற்றும் சமரசம் ஏதும் இல்லாத ஒருவராகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். கௌரி ஹெக்டே – தெருக்களின் நடுவில் விரோத மனப்பான்மை கொண்ட உள்ளூர் மக்களையும், ரவுடிகளையும் எதிர்கொள்கிறார். அவர்களை உடல் ரீதியாக தாக்கி சூழலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஒரு மரத்தடியை பயன்படுத்துகிறார். காவல்துறையினரும், கூட்டமும் அவரை சூழ்ந்து இருந்தாலும்… அவர் சற்றும் கலங்காமல் தனது அதிகாரத்தை எதிர்ப்பவர்களை ஆக்ரோஷமாக அடக்குகிறார்.
அந்தக் காட்சி முழுவதும் மின்னும் ‘ஒரு அச்சமற்ற பெண்’, ‘சக்தி வாய்ந்த அதிகாரி’, ‘இரக்கமற்றவர் ‘, ‘கருணையற்றவர்’, ‘துறையின் பிசாசு’ போன்ற வார்த்தைகள் அவரது கதாபாத்திரத்தின் தன்மையை தெளிவாக உணர்த்துகின்றன. இறுதியில் அவர் தன்னை முழு அதிகாரத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது தான் இதன் உச்சக்கட்டம் வெளிப்படுகிறது. ‘கௌரி ஹெக்டே, துணை ஆணையர், வருமான வரித்துறை’ எனும் அந்த அறிமுகம்… ஒரு மிகச்சிறந்த பூரி ஜெகன்நாத் பிரத்யேகமாக வடிவமைக்கும் கதாபாத்திரத்திற்கே உரிய வீரியத்தையும், கம்பீரத்தையும் கொண்டுள்ளது. இந்த முன்னோட்டத்தில் விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

தபு கம்பீரமாகவும், மிடுக்காகவும் தோன்றுகிறார். தனது திரை தோற்றத்தில் அந்த கதாபாத்திரத்தை முழுமையாக தனதாக்கிக் கொள்கிறார். அவர் கௌரி ஹெக்டே கதாபாத்திரத்திற்கு ஒரு தனித்துவமான அதிகாரத்தையும், அச்சுறுத்தலையும் கொண்டு வருகிறார். இது அந்த கதாபாத்திரத்தை உடனடியாக காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக மாற்றுகிறது. பூரி ஜெகன்நாத் – மறக்க முடியாத கதாபாத்திரங்களை வடிவமைத்து அவற்றை தாக்கத்தை ஏற்படுத்து வகையில் அறிமுகப்படுத்துவதில் எப்போதுமே ஒரு தனித்துவமான திறமை கொண்டவர். மேலும் கௌரி ஹெக்டே-  அவரின் மற்றொரு வசீகரிக்கும் புதிய வரவாக தோன்றுகிறார்.

இந்த படத்திற்கான நடிகர் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. சம்யுக்தா நாயகியாக நடிக்க, துனியா விஜய் வில்லனாக நடிக்கிறார். பிரம்ஹாஜீ மற்றும் விடிவி கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.‌

இப்படத்தின் இருண்ட மற்றும் யதார்த்தமான கதைக் களத்திற்கு ( Dark & Gritty World) தொழில்நுட்பக் குழுவினர் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர்.  சாம் கே. நாயுடு ஒளிப்பதிவையும், ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைப்பையும், சந்தோஷ் நூஜில்லா படத்தொகுப்பையும் மேற்கொள்கின்றனர்.

‘ஸ்லம்டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தை பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர், ஜே பி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஜே பி நாராயண ராவ் கொண்ட்ரோல்லாவுடன் இணைந்து தயாரிக்கின்றனர்.

டைட்டில் லுக்- ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்-  டீசர் – தற்போது வெளியாகி கவனம் ஈர்க்கக்கூடிய கிளிம்ப்ஸ்- ஆகியவற்றின் மூலம் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் உலகம் குறித்த ஆர்வத்தை இவை மேலும் தூண்டுகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் இந்தியா முழுவதும் பான் இந்திய திரைப்படமாக வெளியாக தயாராகி வருகிறது.

நடிகர்கள் :
விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்,பிரம்ஹாஜீ,விடிவி கணேஷ் .

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்நாத் – சார்மி கவுர் & ஜே பி நாராயணன் ராவ் கொண்ட்ரோல்லா
வழங்குபவர் : சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம்: பூரி கனெக்ட்ஸ்
CEO :  விஷ்ணு ரெட்டி
இசை:  ஹர்ஷவர்தன் ராமேஸ்வர்
ஒளிப்பதிவு : சாம் கே. நாயுடு
படத்தொகுப்பு : சந்தோஷ் நூஜில்லா
– VFX : அனில் பாடூரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

Previous Post

குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

Next Post

இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

Next Post

இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

Popular News

  • துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தாய் நிலம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழகத்தை சேர்ந்த இளம் கராத்தே வீரர்கள் இந்திய- இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் 32 பதக்கங்களை வென்று சாதனை!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நெப்போலியன் நடிக்கும் ‘அமெரிக்கா ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • Rowdy Pictures நயன்தாரா, விக்னேஷ்சிவன் தயாரிப்பில் அடுத்த ரொமான்ஸ் திரைப்படம் “Walking/Talking Strawberry Ice Cream “ !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

October 17, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

October 17, 2026

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

October 17, 2026

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

October 17, 2026

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

October 17, 2026

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

October 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.