• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

by Tamil2daynews
March 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

 

கௌதம் கார்த்திக்-சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பிக் பிரிண்ட் பிக்சர்ஸின் ஐபி கார்த்திகேயனுடன் இணைந்து பர்சா பிக்சர்ஸின் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் தட்சிணாமூர்த்தி  ராமர் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது. மேலும் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முன்னதாக திட்டமிட்டபடி குறுகிய காலத்தில்  முடித்துள்ளனர்.
பர்சா பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் கூறும்போது, ​​“முன்பே திட்டமிட்டபடி எங்கள் படக்குழு சரியான நேரத்தில் முழு படப்பிடிப்பையும் முடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் தட்சிணாமூர்த்தி ராமர் தனது முதல் அறிமுகப் படத்திலேயே பெரிய நட்சத்திரங்களையும் படக்குழுவையும் அற்புதமாகக் கையாண்டிருப்பதில் அவரது திறமையை நான் பாராட்டுகிறேன். கெளதம் கார்த்திக் மற்றும் சரத் குமார் ஆகியோர் இந்தப் படம் சிறப்பாக வர வேண்டும் என்று தங்கள் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் கொடுத்ததற்கு நான் நன்றி கூறுகிறேன்” என்றார்.
பிக் பிரிண்ட் பிக்சர்ஸ், ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, ​​“’கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். படப்பிடிப்பைப் பொருத்தவரை சரியான திட்டமிடல் மற்றும் சரியாக அதை செய்து முடிப்பது எப்போதும் தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயம். ஒட்டுமொத்த படக்குழுவின் முழுமையான அர்ப்பணிப்பைக் கண்டு மீனாட்சி சுந்தரம் சாரும் நானும் மகிழ்ச்சியடைகிறோம். படத்தின் ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்”.
படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, பாடல்களை சினேகன் எழுதி இருக்கிறார்.  பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவைக் கையாள, படத்தொகுப்பை மணிகண்ட பாலாஜி கவனிக்கிறார்.
Previous Post

முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

Next Post

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

Next Post

'காசேதான் கடவுளடா' படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீஸ்ட் சரியா போகல, கொஞ்சம் யோசிங்கன்னு சொன்னாங்க..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெல்-விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.