• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பட்டைய கிளப்பும் கூலி

by Tamil2daynews
March 19, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பட்டைய கிளப்பும் கூலி

 

ரஜினி 50 கொண்டாட வரும் ‘கூலி’; அமீர்கானின் சஸ்பென்ஸ் ரகசியம் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைத் தொடங்கிவிட்டனர். பூஜா ஹெக்டே ஆடும் முதல் சிங்கிளை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனல் வீச ஆரம்பித்திருக்கிறது. ‘கூலி’யின் அடுத்த மூவ் என்ன என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்தவை இவை.

ரஜினி மல்டி ஸ்டார்களின் கூட்டணியில் உருவாகி வரும் ‘கூலி’யில் ரஜினியுடன், அமீர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான், ஷோபின் ஷாகீர் எனப் பலரும் நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு பூஹா ஹெக்டே நடனம் ஆடுகிறார். படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் தேவா, அதைப்போல சைமன் ஆக நாகார்ஜுனா, காளீஷாவாக உபேந்திரா, ராஜசேகராக சத்யராஜ், ப்ரீத்தியாக ஸ்ருதி ஹாசன், தயால் ஆக சோபின் ஷாஹிர் ஆகியோரின் கதாபாத்திரங்களின் தோற்றங்களும் பெயர்களும் வெளியாகின. சமீபத்தில் லோகேஷின் பிறந்தநாளின்போது அமீர்கானுடன் சேர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு, அமீர்கானும் படத்தில் இருக்கிறார் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். அன்று தான் லோகேஷுக்கும் அமீர்கானுக்கும் பிறந்த நாள் என்பது அறிந்ததே!
Coolie: Filmmakers unveil brand new Rajinikanth stills Tamil Movie, Music Reviews and Newsஅமீர்கானுக்கு இதில் ரொம்பவே வலுவான ரோல். ரஜினியின் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டதும், மகிழ்ச்சியுடன் வந்து நடித்து கொடுத்திருக்கிறார் அமீர்கான். அவரது போர்ஷன்கள் எண்ணூர் துறைமுகம் பகுதிகளிலும், ராஜஸ்தானிலும் படமாக்கியுள்ளனர். கடந்த வாரத்திலேயே படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டாலும் இப்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த கடைசி ஷெட்யூலில் ஷோபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன் காம்பினேஷனில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. ‘விக்ரம்’ படத்தில் ‘ரோலக்ஸ்’ ஆக சூர்யா கலக்கியதுபோல, அமீர் கான் அசத்தலான மொமன்ட்டில் வந்து கலக்க உள்ளார். அதற்காக அவரது தோற்றத்தை சஸ்பென்ஸாக வைத்துள்ளனர்.
நாகார்ஜூனாவுடன்.. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளைத் தொடங்கிவிட்டனர். பூஜா ஹெக்டே ஆடும் முதல் சிங்கிளை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் தீபாவளி என்றும், ஆகஸ்ட் 15 என்றும் பல தகவல்கள் சுற்றினாலும், ஆகஸ்ட்டில் ரிலீஸ் உறுதி எதிர்பார்க்கலாம் என்ற பேச்சு இருக்கிறது. காரணம். ஆகஸ்ட் 15 என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, சூப்பர் ஸ்டாருக்கும் முக்கியமான ஒரு நாள். அன்று தான் அவர் அறிமுகமான ‘அபூர்வ ராகங்கள்’ வெளியானது. அன்றைய தினம் ‘கூலி’ வெளியானால் ரஜினி 50 கொண்டாடும் விதமாகவும் அமைந்துவிடும் என்கின்றனர். ரஜினியின் ‘ஜெயிலர்’ படமும் 2023ல் ஆகஸ்ட் 10ம் தேதி அன்று தான் வெளியானது. அவருக்கு ராசியான மாதமாக இருப்பதால், ‘கூலி’யை ஆகஸ்ட்டில் எதிர்பார்க்கலாம் என்ற பேச்சு பலமாக இருக்கிறது.
Previous Post

தமிழர் பிரச்சனைகளுக்கு த.வெ.க. தோழர்கள் குரல் கொடுக்க வேண்டும் – நடிகர் சௌந்தர ராஜா

Next Post

வேம்பு படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா

Next Post

வேம்பு படக்குழு பங்கேற்ற உலக சாதனை விழா

Popular News

  • சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார் – Love & War’ படத்திற்காக ரன்பீர் கபூரின் இரண்டு அசத்தலான போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தொழில்நுட்ப மாற்றங்களுடன் மீண்டும் வெளியாகிறது ‘பாஸ் என்கிற பாஸ்கரன் ‘திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வைரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் ஷௌர்யுவ் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி, மிருணாள் தாக்கூர் நடிக்கும் ‘hi நான்னா’ திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.