• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும் அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் ‘வளையம்’ திரைப்படம் எளிய பூஜையுடன் தொடங்கியது!

by Tamil2daynews
March 3, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும் அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் ‘வளையம்’ திரைப்படம் எளிய பூஜையுடன் தொடங்கியது!

 

தமிழ்த் திரையுலகம் எப்போதுமே இளம் இயக்குநர்களின் புது சிந்தனைகளுக்கு ஆதரவு மற்றும் அங்கீகாரம் கொடுக்கும். கடந்த 10 வருடங்களாக ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு இப்படியான இளம் திறமைகளைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். ‘மரகத நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சுலர்’ மற்றும் பல படங்களை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் குறிப்பிடலாம். டிஜி வைஷ்ணவ் கல்லூரி பட்டதாரியான மனோ பாரதி டி.வி சேனல்கள், மீடியா ஹவுஸ் மற்றும் பல வெற்றிகரமான குறும்படங்கள் போன்றவற்றை இயக்கியுள்ளார். அவரது இயக்கத் திறமையைக் கண்டறிந்து அவருடைய புதுப்படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு கைக்கோத்துள்ளார்.

இந்தப் படம் ‘வளையம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. அதிரடி த்ரில்லராக உருவாகி வரும் இதில், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திறமையான தேவ் நடிகராக இந்தப் படத்தில் அறிமுகமாகிறார்.

தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியில் கூறும்போது,”சமூகத்துக்குத் தேவையான தரமான, நல்ல கருத்துள்ள படங்கள் மற்றும் பொழுதுபோக்கு கதைகளை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையுடன் பயணித்து வருகிறோம். இந்த 10 வருடங்களில் நல்ல படங்களை உருவாக்க முடிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு ஆதரவு கொடுத்தத் திரையுலக நண்பர்கள், பத்திரிகை ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு எனது நன்றி. அனைவருக்கும் சிறந்த சினிமா அனுபவத்தை வழங்கும் எங்களின் அடுத்தப் புதிய படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையிலும், மேலும் சில கூடுதல் காட்சிகள் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளன. சேத்தன், தமிழ், பிரதீப் ருத்ரா, ஹரிஷ் பேராடி மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோருடன் மேலும் சில முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் ஆர். வேல்ராஜின் முன்னாள் உதவியாளரான மகேந்திர எம். ஹென்றி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் புகழ் பெற்ற பூபதி படத்தொகுப்பை மேற்கொள்கிறார்.

‘லிஃப்ட்’ படப்புகழ் மைக்கேல் பிரிட்டோ படத்திற்கு இசையமைக்கிறார். கலை இயக்கத்தை பிரதீப் கவனித்துக் கொள்வார். அவர் முன்பு பல்வேறு விளம்பரங்களில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல கதையம்சத்துடன் இத்தகைய திறமையான குழு ஒன்று சேரும் போது, ‘வளையம்’ நிச்சயம் பார்வையாளர்களை கவர்வது உறுதி.

Previous Post

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக் : சசிகுமார் ,பரத், சிபிராஜ் வெளியிட்டனர்!

Next Post

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில், இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15 அன்று வெளியாகிறது!

Next Post

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில், இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15 அன்று வெளியாகிறது!

Popular News

  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • கே.வி.என். புரொடக்ஷன்ஸ்‌ மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள “பாலன் தி பாய்” ஜூன் 19, 2026 அன்று மலையாளம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியாவின் “அவன் இவள்” பர்ஸ்ட் லுக் வெளியானது

    0 shares
    Share 0 Tweet 0
  • பட்டி தொட்டி எங்கும் வைரலான ‘பகாசுரன்’ பாடல்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0

Recent News

கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்

June 7, 2026
ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரஜின் நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

June 7, 2026

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

June 7, 2026

நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!

June 7, 2026

ஜூன் 12 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் டபுள் ஆக்குபன்சி திரைப்படம்!

June 7, 2026

பரிமளா & கோ – விமர்சனம்

June 7, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.