• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நகுல் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’ சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக் : சசிகுமார் ,பரத், சிபிராஜ் வெளியிட்டனர்!

by Tamil2daynews
March 3, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நகுல் நடிக்கும்  ‘தி டார்க் ஹெவன்’ சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில் லுக் :  சசிகுமார் ,பரத், சிபிராஜ் வெளியிட்டனர்!

 

நகுல் நடிக்கும்  ‘ தி டார்க் ஹெவன்’ என்கிற சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தின் டைட்டில்  லுக்கை நடிகர்கள் சசிகுமார், பரத் ,சிபிராஜ் வெளியிட்டுள்ளனர்.

இந்த ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படத்தை பாலாஜி இயக்குகிறார்.டீம் B புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிக்கிறது.

ஒரு கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு  ஒரு முறை மர்மமான முறையில் கொலை நடக்கிறது.

கொலைகளுக்கிடையே உள்ள தொடர்ச்சியை யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஊரில் யாராவது அது பற்றிப் பேசும் போது மற்றவர்கள் அதை ஒரு கதை போல எண்ணி நம்பாமல் கடந்து போகிறார்கள்.

அப்படி ஒரு கொலை நடக்கும் போது அங்கே இளம்பாரி என்கிற இன்ஸ்பெக்டர் பணிக்கு வருகிறார் .அவர்  கொலைக்கான பின்னணியை ஆராய்கிறார் .அதன் பின்னே ஒளிந்துள்ள மர்மங்களைத் தேடிப் பிடித்து  ஆராய்கிறார். கொலைகளில் ஒளிந்துள்ள இருளைக் கண்டு அஞ்சாமல் புலனாய்வு என்கிற விளக்கைக் கொண்டு தீவிரமாகத் தேடுகிறார்.
பல மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன. இப்படி ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லராகச் செல்கிற கதை தான் தி டார்க் ஹெவன்.இதில் புலனாய்வு செய்பவராக நகுல் நடிக்கிறார்.ரேணு சௌந்தர் நாயகியாக நடிக்கிறார். இவர் கேரளத்து வரவு.

எதிர்பாராத ஒரு பாத்திரத்தில் இலங்கையிலிருந்து ஒரு நடிகர் நடிக்கிறார். சரண், கேசவன், ஜான் அலெக்ஸ், மனோஜ், ஆண்டனி பிரகன், டேனி தயால், ஆகியோர் பெயர் சொல்லும் படியான பாத்திரங்களில் வருகிறார்கள்.

இப்படத்திற்கு மணிகண்டன் பி.கே.ஒளிப்பதிவு செய்கிறார்.இவர் D3 படத்திற்கு ஒளிப்பதிவு செய்த வர். சக்தி பாலாஜி  இசையமைக்கிறார். இவர் ஏற்கெனவே உடன்பால் படத்திற்கு இசையமைத்தவர். ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்கிறார். இவர் D3, லேபில் படங்களில் பணியாற்றியவர்.

இப்படி பல்வேறு திறமையான இளைஞர்கள் இணைந்துள்ள இந்தப் படம், முழு வீச்சில்  படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

இப்படிப்பட்ட கதைகள் மொழி எல்லையைக் கடந்தவை என்பதால் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என்று பல மொழிகளில் உருவாகிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகிப் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.
Previous Post

‘எனக்கொரு WIFE வேணுமடா’ Film Dude யூடியூப் சேனலில் ரிலீசானது

Next Post

ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும் அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் ‘வளையம்’ திரைப்படம் எளிய பூஜையுடன் தொடங்கியது!

Next Post

ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும் அறிமுக இயக்குநர் மனோ பாரதி இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ்-தேவ் நடிக்கும் 'வளையம்' திரைப்படம் எளிய பூஜையுடன் தொடங்கியது!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் விஷ்வாவின் புது அவதாரம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.