• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

புரட்சி இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ஆலகாலம் திரைப்பட ட்ரெய்லர்!

by Tamil2daynews
March 28, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

புரட்சி இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரன் வெளியிட்ட ஆலகாலம் திரைப்பட ட்ரெய்லர்!

 

குடும்பங்கள் கொண்டாடப் போகும் ஓர் உன்னதப்படைப்பாக உருவாகி இருக்கும் ‘ஆலகாலம்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை புரட்சி இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன் வெளியிட்டார்.

ட்ரெய்லரைப் பார்த்த அவர் அதில் வந்த காட்சிகள் பிடித்துப் போகவே படத்தின் முழுக் கதையையும் கேட்டறிந்தார். படத்தில்  நாயகனாக நடித்துள்ள நடிகர் ஜெய கிருஷ்ணாவின் நடிப்பையும் பாராட்டினார்.

‘ஆலகாலம்’ என்கிற திரைப்படம் உருக வைக்கும்  ஓர் உண்மைக் கதையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது.

‘ஆலகாலம்’என்றால் கொடிய நஞ்சு ஆகும். வஞ்சகம், சூழ்ச்சி, மது, போதை, அடக்குமுறை என்கின்ற விஷம் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது,  இதில் பெரும்பான்மையான மனித இனங்கள் சிக்கி சின்னா  பின்னமாகிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில்,

இலட்சியத்தோடு வளர்த்தெடுக்கப்படும் மகன், வெற்றிக்காகப் போராடும் இளைஞன், தன்னம்பிக்கையுடன் கரம் கோர்க்கும் காதலி, இவர்கள் வாழ்க்கையைச் சூறையாடும் வஞ்சகம், சூழ்ச்சி எனும் ஆலகாலம்.

இதில் இருந்து இவர்கள் மீண்டார்களா ?
தாயின் லட்சியம்,இளைஞனின் முயற்சி,காதலியின் நம்பிக்கை வெற்றி பெற்றதா என்பதே ‘ஆலகாலம்’திரைப்படம் சொல்லும் கதை.

இப்படத்தை ஜெய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.தமிழ்த்திரை உலகில் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் இயக்குநர்களாகி லோகேஷ் கனகராஜ், உறியடி விஜயகுமார், கார்த்திக் நரேன் போன்ற இயக்குநர்கள் முத்திரை பதித்துள்ளனர்.அவர்களைப் போன்று இப்படத்தை  இயக்கி உள்ள ஜெயகிருஷ்ணாவும் யாரிடமும் உதவியாளராக இல்லாமல் தனது ரசனையின் மூலமும் தேடல் அனுபவத்தின் மூலமும் சினிமாவைக் கற்றுக் கொண்டு களத்தில் இறங்கி உள்ளார்.

காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஈஸ்வரிராவ் இப்படத்தில் அம்மாவாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.

நாயகனாக,ஜெயகிருஷ்ணா, நாயகியாக சாந்தினி நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் தீபா, பாபா பாஸ்கர், தங்கதுரை, கோதண்டம், சிசர்மனோகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.காதலும் பாசமும் நிறைந்த ஒரு குடும்பப் படமாக உருவாகியுள்ளது. தயாரிப்பு. ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்.

ஆக்சன் செண்டிமெண்ட் நிறைந்த இப்படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியுள்ள  தணிக்கைத் துறை அதிகாரிகள்,இந்தப் படம் காலத்துக்கு ஏற்ற கதையைச் சொல்கிறது என்றும் கணவன், மனைவி, அம்மா ,குடும்பம் என்பதையும் தாண்டி நல்ல சமூக நோக்கத்தோடு  உருவாகியிருக்கும் ஒரு படமாக இருப்பதாகவும் பாராட்டி இருக்கிறார்கள்.

தொழில் நுட்பக்குழுவைப் பொறுத்தவரை,
இயக்கம் -ஜெயகிருஷ்ணா
இசை – என்.ஆர்.ரகுநந்தன்,
ஒளிப்பதிவு -கா. சத்தியராஜ்,
எடிட்டர் -மு. காசிவிஸ்வநாதன்,
கலைஇயக்கம் -தேவேந்திரன்
நடனஇயக்குநர் -பாபா பாஸ்கர், அசார்.
ஸ்டண்ட். -ராம்குமார்,
டிசைன்ஸ் -டிசைன்பாய்ண்ட் என்று தொழில்நுட்பக் கூட்டணி உருவாகி உள்ளது.

தயாரிப்பு. ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ்.

நிர்வாகத் தயாரிப்பு.  மணி தாமோதரன்,

மக்கள் தொடர்பு -சக்திசரவணன்

ஏப்ரல் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த ஆலகாலம் திரைப்படத்தை ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனம்  சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

Trailer Link

https://youtu.be/l0ftyA3FrW0?si=jUdAGNyx6dwlJdRS
Previous Post

‘நாம் மறந்துவிட்ட குடும்ப விழுமியங்களை ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படம் நினைவுபடுத்துகிறது’ – ஒளிப்பதிவாளர் கே. யு. மோகனன்

Next Post

‘கா’ – விமர்சனம்

Next Post

'கா' - விமர்சனம்

Popular News

  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி (The India Story) படத்தின் டீசர் விரைவில் வெளியீடு : ஜூலை 24ஆம் தேதி திரைப்படம் வெளியாகிறது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.