• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

by Tamil2daynews
March 4, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

 

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
Image‘சீயான்’ விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் ‘சீயான் 62’ எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’, ‘டிரைவிங் லைசன்ஸ்’, ‘ஜன கன மன’, ‘த கிரேட் இந்தியன் கிச்சன்’ ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் முதன் முறையாக தமிழில் ‘சீயான் 62’ படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

‘சீயான்’ விக்ரம்- எஸ். ஜே. சூர்யா -சுராஜ் வெஞ்சாரமூடு என தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த விருது பெற்ற நட்சத்திர கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Previous Post

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !!

Next Post

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் டீசர் மார்ச் 4 அன்று வெளியாகிறது!

Next Post

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் டீசர் மார்ச் 4 அன்று வெளியாகிறது!

Popular News

  • விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

    0 shares
    Share 0 Tweet 0
  • மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.