• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !!

by Tamil2daynews
March 4, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தி கேரளா ஸ்டோரி  திரைப்படம் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !! 

 

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை, உலகளவில்  டிஜிட்டல் வெளியீடு செய்தது. இப்படம் தென்னிந்தியப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்கச் சாதனையைச் செய்துள்ளது.   உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், ஒரு அழுத்தமான படைப்பாக அனைவராலும் பாராட்டைப் பெற்றது. பிப்ரவரி 16 ஆம் தேதி உலகம் முழுக்க டிஜிட்டல் வெளியீடாக வெளியான இப்படம், வெளியான  இரண்டு வாரங்களுக்குள் 300 மில்லியன் பார்வை நிமிடங்களைத் தாண்டியது மட்டுமல்லாமல், இந்திய நாட்டின் தென் பகுதியில் குறிப்பாகத்  தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் அதிகம் பார்க்கப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகச் சாதனைப் படைத்துள்ளது. விபுல் அம்ருத்லால் ஷாவின் தயாரிப்பில், சுதிப்தோ சென் இயக்கிய இப்படம், கேரளாவில் இளம் இந்துப் பெண்களைத் தீவிரவாதிகளாக ஆக்கி,  மதமாற்றம் செய்வதாகக் கூறப்படும் உண்மைச் சம்பவங்களைச் சுற்றி,  அமைக்கப்பட்ட அழுத்தமான படைப்பாகும்.

இப்படம் திரையரங்கில் வெளியானபோது, ​​பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது  டிஜிட்டல் வெளியீட்டிலும் அதன் வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறது.  உலகளாவிய பார்வையாளர்களுக்குச்  சிறப்பான படைப்புகளைத் தொடர்ச்சியாக வழங்கி வரும்   ZEE5 இன் மகுடத்தில் மற்றொரு  கிரீடமாக அமைந்துள்ளது.

நடிகை அடா ஷர்மா கூறுகையில்.., “ZEE5 இல் கேரளா ஸ்டோரி படத்திற்குக் கிடைத்து வரும்  வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.  இப்படம் திரையரங்குகளில் பல சாதனைகளைச் செய்தது, இப்போது OTT யிலும் பல சாதனைகளைச் செய்து வருவது மகிழ்ச்சி. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், பலர் இப்படத்தின் வாயிலாக எங்களுக்கு அவர்களின் இதயத்தில் நிரந்தர இடத்தைத் தந்துள்ளனர். பார்வையாளர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது முறையாகப் படத்தைப் பார்ப்பதாக வரும் செய்திகள், பெரும்  மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொருவரையும் கவரும் அழுத்தமான இப்படத்தினை  ZEE5 உலகம் முழுவதும் உள்ள மக்களின் வீடுகளுக்குக் கொண்டு சேர்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! ”

மிகச் சக்தி வாய்ந்த கதையுடன், நம் சிந்தனையைத் தூண்டி விடும், கேரளா ஸ்டோரி ZEE5 இல் தொடர்ந்து, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களின் இதயங்களை வென்று, வரவேற்பைக் குவித்து வருகிறது. வெளியான  இரண்டு வாரங்களுக்குள் 300 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து பெரும் சாதனை படைத்துள்ளது.
Previous Post

சமுத்திரக்கனி, யோகிபாபு நடிப்பில், இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ’யாவரும் வல்லவரே’ படம் மார்ச் 15 அன்று வெளியாகிறது!

Next Post

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

Next Post

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • இருமுடி கட்டு – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.