• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ‘கங்கணம்’

by Tamil2daynews
March 23, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பழிவாங்குதலின் பரிமாணங்களைக் காட்டும் ‘கங்கணம்’

 

ஒரு செயலில் உறுதியாக செயல்படுத்தியே தீர வேண்டும் என்று நிற்பதைக்’ கங்கணம் கட்டிக்கொண்டு’ நிற்பதாகச்  சொல்வார்கள்.கங்கணம் என்பது ஒரு விரதக் கயிறு.கோவில் விழாக்களுக்கு விரதம் இருப்பவர்கள் கட்டிக் கொள்வார்கள். கங்கணம் என்பது விரலி மஞ்சளை மஞ்சள் கயிற்றில் கட்டி அத்துடன் வெற்றிலை ஒன்றை மடித்துச் சேர்த்துக் கட்டி அதை வலது கையில் கட்ட வேண்டும் .உள்ளே உள்ள பொருட்கள் தெரியாமல் அதன் மேல் மஞ்சள் துணியால் கட்டிக்கொள்வர்.இதைக் காப்பு என்றும் சொல்வார்கள் .இப்படிக் காப்பு கட்டி விட்டால் அவர்கள் நினைத்த காரியத்திற்கு எந்தத் தடையும் இல்லாமல் இறையருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.எனவேதான் காரிய உறுதிபாட்டைக் கூறும் போது ‘கங்கணம் கட்டிக் கொள்வது’ என்று கூறுவார்கள்.

அப்படிப்பட்ட ‘கங்கணம்’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது.இப்படத்தின் கதையில் கதாநாயகன் குடும்பத்தில் கொடூரமான சம்பவம் ஒன்றை வில்லன் செய்து விடுகிறான். அது மட்டும் அல்லாமல் ஒரு போலீஸ் அதிகாரியையும் உச்சகட்ட அவமானப் படுத்தி விடுகிறான். அத்தோடு நிற்காமல் அங்குள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அவன் பெரிய தொல்லை கொடுத்து வருகிறான்.அவர்களில் ஐந்து பேர் கொண்ட குழுவாக இணைந்து பழிவாங்கத் துடிக்கிறார்கள். இப்படிப் பாதிக்கப்பட்ட மூன்று தரப்பினருமே அவனை பழிவாங்க வேண்டும் என்று வெஞ்சினம் அதாவது கடும் கோபம் கொண்டு கங்கணம் கட்டிக்கொண்டு வைராக்கியமாக இருக்கிறார்கள். அவனை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்று சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப் பழிவாங்குதலின் மூன்று பரிமாணங்களும் ஒரு புள்ளியில் மையம் கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதுதான் ‘கங்கணம் ‘படத்தின் கதை.

இப்படத்தை அ. இசையரசன் இயக்கியுள்ளார்.இவர் குறும்படங்கள் இயக்கி தன் திறமைக்கு சான்றுகள் உருவாக்கி உள்ளவர். இவர் இயக்கிய’ என் கண்ணே’ என்கிற குறும்படம் நான்கு விருதுகள் பெற்றது.இவரும் கூத்துப்பட்டறை சௌந்தரும் நண்பர்கள் .  குறும்படத்தை பார்த்துவிட்டு சௌந்தர் ஏன் நீங்கள் ஒரு படம் பண்ண கூடாது அவர் தூண்டுதலில் கதையை உருவாக்கிய இயக்குனர். இக்கதை களத்திற்கு நீங்கள் தான் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று கங்கணம் படம் தொடங்கப்பட்டு .படத்திற்காக சௌந்தர்  ஒன்பது மாதங்கள் முடி வளர்த்து  கடும் உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பையே மாற்றிக் கொண்டு, தன்னைத் தயார் படுத்திக் கொண்டு நடித்துள்ளார். இப்படத்தின் கதையைக் கேட்ட கல்யாணி.K மற்றும் சிரஞ்சன்.KG ஆகியோர் தங்களது நிறுவனமான  கல்யாணி இ என்டர்பிரைஸ் மூலமாக  கங்கணம் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் கதையின் நாயகனாக கூத்துப்பட்டறை சௌந்தர் நடித்துள்ளார்.இப்படத்தில்  கதாநாயகிகள் அஸ்வினி சந்திரசேகர்  இவர் ஜீவி 2, டைட்டில் படங்களில் நடித்துள்ளவர். மற்றொரு நாயகி மூன்றாம் மனிதன்,குற்றச்சாட்டு,கிளாஸ்மேட் , படங்களில் நடித்தவர் பிரணா. முக்கிய கதாபாத்திரத்தில் சிரஞ்சன் நடித்துள்ளார்’ பருத்திவீரன் ‘ புகழ் கலைமாமணி சரவணன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் வில்லன் மூலம் பட்ட அவமானத்தைத் துடைப்பதற்கு  ‘இந்தத் துப்பாக்கியால் தான் நீ சாகப் போகிறாய் ‘என்று வெறியோடு காத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த பாத்திரத்தில் வருகிறார். ஒட்டுமொத்த மூர்க்கத்தின் சின்னமாக வில்லன் பாத்திரத்தில் சம்பத்ராம் நடித்துள்ளார்.
அண்மையில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள ‘மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தில் நடித்த நடிகர் அட்ரஸ் கார்த்திக் ஒரு முக்கியமான பாத்திரத்தில் வருகிறார். தவிர,இயக்குநர் மனோபாலா, ‘விஜய் டிவி’ ராமர், சேதுபதி ஜெயச்சந்திரன், ‘கயல்’ மணி, ‘ராட்சசன்’ யாசர் , அர்ச்சனா மாரியப்பன், ஸ்ரீ மகேஷ், சிரஞ்சன் கேஜி, பாரிவள்ளல், அருண்பிரசாத், கும்கி தரணி, அறந்தாங்கி மஞ்சுளா, ரோகிணி பழனிச்சாமி, ரியா, ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு GA சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘முந்திரிக்காடு’ உட்பட ஆறு படங்களில் இவர் பணியாற்றி உள்ளார். நூற்றுக்கு மேற்பட்ட ஆல்பங்கள் உருவாக்கிய செல்வா இசையமைத்துள்ளார்.நான்கு  பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார்.’எஞ்சாமி’ ஆல்பம் புகழ் தெருக்குரல் அறிவு, V.M. மகாலிங்கம் ,கயல் கோபு, ஸ்ரீநிஷா ஆகியோர் பாடியிருக்கிறார்கள்.J. ஜெயபாலன் படத்தொகுப்பு செய்துள்ளார். மிரட்டல் செல்வா சண்டைக் காட்சிகள் அமைத்துள்ளார். இப்படத்தில்  பிரம்மாண்ட சண்டைக் காட்சிகள் வருகின்றன. நடன இயக்குநர்களாக தினா, ஜாய்மதி பணியாற்றியுள்ளனர்.கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்துள்ளார்.

‘கங்கணம்’ படத்தின் படப்பிடிப்பு 70 நாட்கள் நடைபெற்றுள்ளது. மதுரை மேலூர், சென்னை, தேனி என்று பல்வேறுபட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய  திரை அனுபவமாக உணரும் வகையில் இந்த ‘கங்கணம்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது .படப்பிடிப்புக்குப் பிந்தைய மெருகேற்றும்  இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Previous Post

‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ மார்ச் 22 முதல் மீண்டும் திரையரங்குகளில் !!

Next Post

பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’..!

Next Post

பரபரப்பான இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'..!

Popular News

  • Mrs and Mr – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Freedom – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • “டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில், வெளியானது “மஹாவதார் நரசிம்மா” டிரெய்லர் !

July 12, 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், தனுஷ் நடிக்கும் D54 பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!

July 12, 2025

“டிரெண்டிங்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

July 12, 2025

சவுத் ஸ்டார்ஸ் x மார்வெல்: ‘ஃபென்டாஸ்டிக் ஃபோர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினால் எந்தெந்த நடிகர்கள் நடிக்கலாம்?

July 12, 2025

“பறந்து போ” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடிய படக்குழுவினர்!

July 12, 2025

Freedom – விமர்சனம்

July 12, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.