• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கல்யாணி (Kalyani) & நஸ்லென் (Naslen) இணைந்து நடிக்கும், “லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று திரைக்குவருகிறது!!

by Tamil2daynews
August 12, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கல்யாணி (Kalyani) & நஸ்லென் (Naslen) இணைந்து நடிக்கும், “லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று திரைக்குவருகிறது!!

 

துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படைப்பு, லோகா – சேப்டர் 1 : சந்திரா திரைப்படம், இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக  திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தத்திரைப்படம், இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். டொமினிக் அருண் ( Dominic Arun) எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய  உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார் ( Chandhu Salim Kumar),அருண் குரியன் (Arun Kurian), சாந்தி பாலச்சந்திரன் ( Shanthy Balachandran) உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  பல பகுதிகளாக உருவாகும் லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின்  முதல் பாகம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி
இசை – ஜேக்ஸ் பீஜாய்
எடிட்டிங் – சாமன் சகோ
நிர்வாக தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி
கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்
தயாரிப்பு வடிவமைப்பு – பாங்லான்
கலை இயக்கம் – ஜிது செபாஸ்டியன்
மேக்கப் – ரோனெக்ஸ் சாவியர்
உடை வடிவமைப்பு  – மெல்வி J, அர்ச்சனா ராவ்
ஸ்டில்ஸ் – ரோஹித் கே.சுரேஷ், அமல் K.சதார்
சண்டைக் காட்சிகள் – யானிக் பென்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு  – ரினி திவாகர், வினோஷ் கையமல்
முதன்மை உதவி இயக்குநர் – சுஜித் சுரேஷ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

Previous Post

வார் 2 படத்தின் டிக்கெட் முன்பதிவு இந்தியளவில் துவக்கியதை ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆரின் அதிரடி புரோமொ உடன் யஷ் ராஜ் நிறுவனம் அறிவித்துள்ளனர்!

Next Post

நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ படத்தில் இருந்து ‘பனிமலரே…’ முதல் பாடல் வெளியாகியுள்ளது!

Next Post

நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!

Popular News

  • சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ராம் அண்ட் லீலா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்மேன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

August 21, 2026

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

August 21, 2026

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

August 21, 2026

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 21, 2026

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

August 21, 2026

“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

August 21, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.