• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘வட்டார வழக்கு’ விமர்சனம்

by Tamil2daynews
December 27, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘வட்டார வழக்கு’  விமர்சனம்

 

இளையராஜா இசையில் காதல், கிராமம் என இப்படி ஒரு படம் வந்து பல வருடங்களாகி விட்டது என்று உணர்த்தும் விதமாகவும்  உணர்வுகளை சொல்லும் படமாக வந்துள்ளது கண்ணுசாமி ராமசந்திரன் இயக்கியுள்ள ‘வட்டார வழக்கு’ திரைப்படம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இரு பங்காளி குடும்பங்களிடயே பல தலைமுறைகளாக  காழ்ப் புணர்ச்சி நிலவி வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த நம்ம ஹீரோ சேந்தன் இன்னொரு குடும்பத்தில் உள்ள சிலரை கொன்று விடுகிறார். இந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார்கள் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர். இந்த கதையை  வட்டார மனிதர்களின் எமோஷனலாக தந்துள்ளார் இயக்குநர்.

வட்டார வழக்கு பேசும் ரவீனா ரவி | Tamil Cinema News Vattara Vazhakku movie release update

படத்தில் சில குறிப்பிட்ட நடிகர்களை தவிர பெரும்பான்மையான நடிகர்கள் கதை நடக்கும் இடத்தில் உள்ள மக்களையே நடிக்க வைத்துள்ளார் டைரக்டர். இதுவே இப்படத்திற்கு பெரிய பலம் என்று சொல்லலாம். இவர்களின் உடல் மொழியும் வசன உச்சரிப்பும் நம்மை ஒரு லைவ் கிராமத்திற்கு அழைத்து சென்று விடுகிறது.

ரவீனா ரவி இதற்கு முன்பு லவ் டுடே, மாமன்னன் உட் பட  பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இந்த வட்டார வழக்கு படத்தில் மண்ணின் பெண்ணாக, கிராமத்து டீச்சராக, தொட்டிச்சி  கதா பாத்திரத்தில் ஒரு சிறந்த நடிப்பை தந்துள்ளார்.  இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் ஏற்கனவே டுலெட் படத்தில் நடித்தவர். இப்படத்தில் ஒரு முரட்டு மனிதனாக, கோபத்தையும் காதலையும் சரியாக கடத்தி விடுகிறார்.
வட்டார வழக்கு பேசும் ரவீனா ரவி | Tamil Cinema News Vattara Vazhakku movie release updateஇளையராஜா, சில இடங்களில் எந்த வித பின்னணி இசையையும் தராமல்  உணர்வுகளின் வலியை சரியாக தந்து விடுகிறார்.  பின்னணி இசையில் தான் எப்போதும் முன்னனிதான் என்பதை நிரூபித்து விடுகிறார் இளையராஜா. படத்தின் கதை 1987 கால கட்டத்தில் நடக்கிறது. இந்த காலகட்டத்தில் ராஜாவின் இசையில் வெளியான சில பாடல்கள் அவ்வப்பொழுது பின்னணியில் ஒலிக்கிறது. இதுவும் கூட நன்றாக உள்ளது. சுரேஷின் ஒளிப்பதிவில் கரிசல் காட்டின் வெப்பம் தெரிகிறது.

மாற்று சினிமாவை விரும்புபவர்களுக்கும், ஒரு யதார்த்த படத்தை ரசிப்பவர்களுக்கும் வட்டாரவழக்கு சரியான தேர்வாக அமையும்
Previous Post

‘பிக் பாஸ்’ புகழ் பூர்ணிமா ரவி நடிப்பில், எம்.எஸ். ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செவப்பி- ஆஹா ஒரிஜினல்’ ஜனவரி 12, 2024 அன்று ப்ரீமியர் ஆகிறது!

Next Post

‘முடக்கறுத்தான்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Next Post

'முடக்கறுத்தான்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0
  • கவித்துவமான காதல், கண்கவரும் காட்சிகள், ரசிக்க வைக்கும் கெமிஸ்ட்ரியுடன் மனம் வருடும் அழகிய காதல் கவிதையாக வெளியாகியுள்ளது ‘ஹைக்கூ’ திரைப்பட டீசர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.