• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

by Tamil2daynews
May 20, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

 

ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘புரொடக்ஷன் நம்பர் 33 – #சூர்யா 46 ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா பிரம்மாண்டமான பூஜையுடன் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழ் – தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதை குறிக்கிறது. சூர்யா- வெங்கி அட்லூரி கூட்டணியில் தொடங்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Imageதெலுங்கிலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் சூர்யாவின் கதாபாத்திர தேர்வு மற்றும் பன்முகத்தன்மை ஆகியவை  தொடர்ந்து படைப்பு எல்லைகளை கடந்து வருகிறது. அவரது நடிப்பில் 46 ஆவது படமான ‘ #சூர்யா 46’ – சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் ‘புரொடக்ஷன் நம்பர் 33 ‘ என்ற பெயரில் முழு அளவிலான இரு மொழி படமாக தயாராகிறது. மேலும் இது தமிழ் மற்றும் தெலுங்கு பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்குவதை உறுதி செய்கிறது.இயக்குநர் வெங்கி அட்லூரியின்  இயக்கத்தில் உருவான ‘ சார் /வாத்தி’ , ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய சமீபத்திய படங்கள் தொடர்ச்சியான வெற்றியை பெற்றிருக்கிறது. தனது தனித்துவமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற வெங்கி அட்லூரி-  தற்போது சூர்யாவுடன் கரம் கோர்க்கிறார். இயல்பான படைப்பிலிருந்து மாறி, அசாதாரணமானதாக இருக்கும் என்று உறுதி அளிக்கும் வகையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகளை அவர் அதிகரிக்கிறார்.
Image‘பிரேமலு ‘ படத்தின் மூலம் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையான மமீதா பைஜூ கதாநாயகியாக இணைகிறார். இவருடன் ரவீனா டாண்டன் தெலுங்கு சினிமாவில் மீண்டும் மறுபிரவேசம் செய்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தேசிய விருதைப் பெற்ற  ஜீ.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒரு இசை அனுபவத்தை வழங்குவதற்காக வெங்கி அட்லூரியுடன் இணைந்திருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை நவீன் நூலி கவனிக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை பங்களான் ஏற்றுக் கொள்கிறார். இந்த திரைப்படத்தை வெற்றிகரமான திரைப்படங்கள் மற்றும் தரமான திரைப்படத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் எஸ். நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

2026 ஆம் ஆண்டில் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு மே மாத இறுதியில் தொடங்குகிறது.

நடிகர்கள் : சூர்யா, மமீதா பைஜூ, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார்.

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : வெங்கி அட்லூரி
தயாரிப்பாளர்கள் :  எஸ். நாக வம்சி – சாய் சௌஜன்யா
இசை : ஜீ. வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு :  நிமிஷ் ரவி
படத்தொகுப்பு : நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பு : பங்களான்
சண்டை பயிற்சி : வி. வெங்கட்
நடன இயக்குநர் : விஜய் பின்னி
நிர்வாகத் தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபாலகிருஷ்ணா
லயன் புரொடியூசர் : உமா மகேஸ்வர் ராவ்
தயாரிப்பு நிறுவனம் : சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் – ஃபார்ச்சூன் போர் சினிமாஸ்
வழங்குபவர்கள் : ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ்.

Previous Post

மைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்‌ஷன் எபிக் ‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!

Next Post

”‘மையல்’ என் வாழ்வை மாற்றிய படம்”- நடிகர் சேது!

Next Post

”‘மையல்’ என் வாழ்வை மாற்றிய படம்”- நடிகர் சேது!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.