• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

குழந்தைகளை கவரும் விதமாக யானையை மையப்படுத்தி உருவாகும் ‘அழகர் யானை’

by Tamil2daynews
August 27, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குழந்தைகளை கவரும் விதமாக யானையை மையப்படுத்தி உருவாகும் ‘அழகர் யானை’

 

SV புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவசங்கர் & வேலன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘அழகர் யானை’. மரகதக்காடு படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் இரண்டாவதாக இயக்கும் படம் இது. விஜய் டிவி புகழ் கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் காருண்யா, கோகுல் நடிக்கின்றனர்.. இவர்கள் தவிர 80 அடி உயர யானை ஒன்று இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது.

படம் குறித்து இயக்குனர் மங்களேஷ்வரன் கூறும்போது, “இன்றைய சூழலில் வாழ்வின் மீதான நம்பிக்கை என்பது வாழ்க்கையில் பலருக்கும் குறைந்து வருகிறது. ஒருவருக்கு பணமோ மருத்துவ உதவியோ கொடுத்து உதவுவதை விட அவர்களுக்கு மனோரீதியாக நாம் தரும் நம்பிக்கை என்பதே மிக அவசியமாக இருக்கிறது. அப்படி  ஒரு நம்பிக்கையை தரும் படமாக இந்த ‘அழகர் யானை’ உருவாகிறது.. எல்லோருக்குமான மழையையும் காற்றையும் போல எல்லோருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் விதைப்பதே இந்த ‘அழகர் யானை’.கங்கைகொண்ட சோழபுரத்தில் 169 அடி உயரத்தில் ஒரு யானை சிலை இருக்கிறது. ராஜேந்திர சோழன் வெற்றி கொண்ட பிறகு அந்த யானையை நிறுவி அதற்கு ‘அழகர் யானை’ என பெயர் வைத்தார். ஒரு சோழ மன்னன் பாண்டிய நாட்டில் பயன்படுத்தப்படும் அழகர் என்கிற பெயரை வைத்துள்ளார். அந்த மாதிரி ஒரு நம்பிக்கையை விதைக்கும் விதமாகத்தான் ‘அழகர் யானை’ என்கிற பெயரை படத்திற்கு வைத்துள்ளோம்.
எம்ஜிஆரின் நல்ல நேரம், ரஜினிகாந்தின் அன்னை ஓர் ஆலயம், கமலின் ராம் லட்சுமண் ஆகிய படங்களைப் போல யானையை மையப்படுத்தி குழந்தைகள் ரசிக்கும் விதமாக இந்த படம் உருவாகிறது.. இந்த படத்தில் குழந்தைகள் நடிப்பதுடன் யானையும், குழந்தைகளுக்கு ரொம்பவே பிடித்த விஜய் டிவி புகழும் நடிப்பதால் நிச்சயம் குழந்தைகள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரையும் இந்த படம் கவரும். நகைச்சுவை நடிகரான ஆடுகளம் முருகதாஸ், வில்லன் நடிகர் ஆர்யன் இருவருமே இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்” என்றார்..
இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இஸ்ரோ இணை இயக்குநர் S.V. சர்மா, டாக்டர். நடேஷ் மூர்த்தி ISRO, கர்நாடக டிஜிபி K. ராமச்சந்திர ராவ், பிரதாப் குமார் IAS, நீதி அரசர் ராஜீவ் கவுடா, Y M விஸ்வேஸ்வர ராஜு, அக்ஷ்ய் பூதகிரே ஆகியோர் பூஜையை  துவக்கிவைத்தனர்.

படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. மலை அடிவாரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடக்கும் கதை என்பதால் இதன் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் கேரளாவில் நடைபெற இருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; SV புரொடக்ஷன்ஸ் / சிவசங்கர்
இயக்கம் ; மங்களேஷ்வரன்
இசை ; ஸ்ரீகாந்த் தேவா
படத்தொகுப்பு ; சாபு ஜோசப்
ஒளிப்பதிவு ; சபா குமார்
பாடல்கள் ; அருண் பாரதி, நந்தலாலா, சாரதி
நடனம்: ஜாய் மதி
நிர்வாக தயாரிப்பு: கார்த்திக் வெங்கடேசன்
மக்கள் தொடர்பு ; KSK செல்வகுமார்

Previous Post

”’அந்த ஏழு நாட்கள்’ படத்தின் கதைக்கு தலைப்பை தேர்ந்தெடுத்ததே பாக்யராஜ் சார்தான்!”

Next Post

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!!

Next Post

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.