• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ட்ராமா – விமர்சனம் ரேட்டிங் – 2.5 / 5

by Tamil2daynews
March 24, 2025
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ட்ராமா –  விமர்சனம்

மூன்று வெவ்வேறு சம்பவங்களின் க்ரைம் முடிச்சுகளை ஒருசேர அவிழ்த்து அதிர்ச்சி அளிக்கும் ஆந்தாலாஜி கதை.

இரண்டு திருடர்கள் சேர்ந்து, கார் ஒன்றை கடத்துகிறார்கள். வழியில் போலீஸ் சோதனையில் கார் சிக்க.. டிக்கியை திறந்து பார்த்தால் ஒரு இளைஞனின் பிணம்…

காவல் அதிகாரி விசாரிக்க ஆரம்பிக்கிறார் அதன் பிறகு நடக்கும் அதிரடி த்ரில் சம்பவங்களே கதை.\

விவேக் ப்ரசன்னா – சாந்தினி தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் விவேக் ப்ரசன்னா, இறுதி முயற்சியாக ஒரு மருத்துவரிடம் மருந்து வாங்கி சாப்பிடுகிறார்.. சாந்தினி கர்ப்பமாகிறார்… அந்த நேரத்தில் ஒரு மர்ம போன் வந்து அவரை அலற வைக்கிறது..

ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்துவின் மகள் பூர்ணிமா தேவி, தனது காதலனை ‘பார்க்கக்கூடாத’ நிலையில் பார்த்து அதிர்கிறார்.பிரதீப் கே விஜயன் மருத்துவர் என்கிற போர்வையில் விபரீத வேலைகளில் ஈடுபடுகிறார்.இந்த மூன்று கதைகளைத்தான் ஒரே முடிச்சில் இணைத்து இருக்கிறார் இயக்குநர்.

விவேக் ப்ரசன்னா வழக்கம்போல சிறப்பாக நடித்து உள்ளார். குழந்தை இல்லாத ஏக்கம்… தன்னிடம்தான் குறை இருக்கிறது என்பதை மனைவியிடம் மறைத்த குற்ற உணர்வு.. இறுதியில் தன் தவறை கொட்டித் தீர்க்கும் இடம்.. என அருமையான நடிப்பு.
Trauma Movie Review: Vivek Prasanna's Film Suffers From Puerile Execution, But Underlines An Important Problem - News18

அவர் மனைவியாக வரும் சாந்தினியும் இயல்பாக நடித்து இருக்கிறார். பிள்ளை இல்லாத கவலை, கர்ப்பமானதும் உற்சாகம், மர்ம போன் வந்த பிறகு அடையும் அதிர்ச்சி… என அசத்துகிறார்.

இவர்களின் குடும்ப நண்பராக வரும் அனந்த் நாக் கவனத்தை ஈர்க்கிறார்.

பூர்ணிமா தேவி, ஏமாற்றப்பட்ட நிஜ காதலியை கண் முன் நிறுத்துகிறார். காதல் காட்சியில் மட்டுமல்ல.. இறுதியில் காதலனின் நடத்தையை அறிந்து பொங்கும் காட்சியிலும் சிறப்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உள்ளார்.

நல்ல காதலன்.. மோசமான வில்லன் என ஒரே கதாபாத்திரத்தில் இருவேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கவன்தை ஈர்க்கிறார் பிரதோஷ்.

போலீஸ் அதிகாரியாக வரும் சஞ்சீவ், அம்மா காதாபாத்திரத்தில் வரும் ரமா என அனைவருமே சிறப்பான நடிப்பை அளித்து உள்ளனர்.

மாரிமுத்து, நிழல்கள் ரவி ஆகியோரைப் பற்றி தனியாகச் சொல்லவே தேவையில்லை.

அஜித் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவு அருமை.ஆர்.எஸ். ராஜ்பிரதாப்பின இசை படத்துக்கு பலம். த்ரில்லர் காட்சிகளில் மேலும் பயத்தை அதிகரிக்கிறது. அதே போல காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.

முகன்வேலில் எடிட்டிங் கச்சிம்.

மூன்று க்ரைம் கதைகள்.அதை ஒன்றாக இணைத்த அந்தாலஜி கதையை எந்தவித குழப்பமும் இல்லாமல், சிறப்பாக இயக்கி இருக்கிறார் தம்பித்துரை மாரியப்பன். அதோடு, தனியார் நடத்தும் கருத்தரிப்பு மையங்கள் (பெர்டிலிட்டி சென்டர்) குறித்த எச்சரிக்கை பார்வையையும் அளித்து இருக்கிறார்.பொதுவாக திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த படம் மிக வெற்றி பெற்றிருக்கும்.
Previous Post

நானே என் முதல் படத்திற்கு மொக்கை கதையை தான் வைத்திருந்தேன் EMI பட விழாவில் இயக்குனர் பாக்கியராஜ் கலகலப்பு..

Next Post

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” 2026 மார்ச் 19 அன்று வெளியாகிறது !!

Next Post

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” 2026 மார்ச் 19 அன்று வெளியாகிறது !!

Popular News

  • 25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

    0 shares
    Share 0 Tweet 0
  • காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !

September 27, 2026

25 மாவட்டங்கள்… 2,000 ரசிகர்கள்… பிரம்மாண்டமாக நடைபெற்ற திரு. சூர்யா ரசிகர்களின் Photoshoot!

September 27, 2026

மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!

September 27, 2026

காதல், சிக்கல்கள் மற்றும் அதற்கு இடையில் இருக்கும் அனைத்தும்: நயன்தாரா மற்றும் கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘Hi’ திரைப்படத்தை செப்டம்பர் 25 முதல் ரசிகர்களிடம் கொண்டு வருகிறது தமிழ் ZEE5

September 27, 2026

இதுவரை பார்த்திராத அதீத தீவிரமும் கம்பீரமும்… சஞ்சய் லீலா பன்சாலியின் ‘Love & War’ படத்தில் விக்கி கௌஷலின் இரு மாறுபட்ட தோற்றங்கள்!

September 27, 2026

ராவணனாக மிரட்டும் ராக்கிங் ஸ்டார் யஷ்! ராமாயணம் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியானது

September 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.