• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம் ‘ படத்தின் தொடக்க விழா

by Tamil2daynews
October 30, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம் ‘ படத்தின் தொடக்க விழா

 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் டிஜிட்டல் திரை நட்சத்திரமும், ‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவருமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ‘டயங்கரம்’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எல் ஏ ஸ்டுடியோவில் சிறப்பாக நடைபெற்றது.

நடிகரும், அறிமுக இயக்குநருமான வி ஜே சித்து இயக்கத்தில் உருவாகும்’ டயங்கரம்’ எனும் திரைப்படத்தில் வி ஜே சித்து, நட்டி நட்ராஜ், காளி வெங்கட், இளவரசு, நிதின் சத்யா, ஹர்ஷத்கான் , ‘ஆதித்யா’ கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் கவனிக்க, ஏ. கீர்த்தி வாசன் ஆடை வடிவமைப்பாளராகவும், அஸார் நடன இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.  சமகால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கிறார்.
Imageஇந்த திரைப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்குகிறது. அத்துடன் படத்தின் இசையை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தத் திரைப்படம் இன்றைய இளைஞர்களின் துடிப்பான ஆற்றலை மையப்படுத்திய படமாக இருக்கும் என்றும், காமெடி, எமோசன் மற்றும் சுய அடையாளத்தை கண்டுபிடித்தல் உள்ளிட்ட இளைஞர்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படைப்பாக ‘டயங்கரம் ‘ இருக்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.‌

இப்படத்தின் தொடக்க விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தமிழ் திரையுலகத்தை சார்ந்த ஏராளமான பிரபலங்கள் நேரில் வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.‌
Image
படத்தின் படப்பிடிப்பு பணிகள் மற்றும் வெளியீடு குறித்த அப்டேட் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் – தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் – வி‌ ஜே சித்து- இளவரசு கூட்டணியில் வெளியான இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ வீடியோ – இணையத்தில் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

நான் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம்! அதை தொடர்ந்து எடுப்பேன்!! – இயக்குனர் மாரி செல்வராஜ் ஓப்பன் டாக்!

Next Post

ஆர் கே இன்டர்நேஷனல் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகம்

Next Post

ஆர் கே இன்டர்நேஷனல் கே எஸ் ராமகிருஷ்ணா தயாரிப்பில் ஷாலின் ஜோயா தமிழில் இயக்குநராக அறிமுகம்

Popular News

  • “ஆதாயத்துக்காகவும் நடிக்கணும்.. ஆத்ம திருப்திக்காகவும் நடிக்கணும்” ; கசிவு திரைப்படம் குறித்து நெகிழ்ந்த எம்.எஸ்.பாஸ்கர்

    0 shares
    Share 0 Tweet 0
  • பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ” ஆகாசவாணி சென்னை நிலையம் “

    0 shares
    Share 0 Tweet 0
  • இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின் ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.

    0 shares
    Share 0 Tweet 0
  • “மாமனிதன்” விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகும் ஃபான் இந்தியா படம் ‘ஜின்னா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெஸன்ஜர் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

October 30, 2025

“அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

October 30, 2025

“வள்ளுவன் படம் இன்னொரு ஜென்டில்மேன் ஆக இருக்கும்” ; ‘ஜென்டில்மேன்-2’ ஹீரோ நம்பிக்கை

October 30, 2025

“திரைக்கதைதான் ஹீரோ” – புதிய முயற்சியுடன் இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்!

October 30, 2025

பைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரிசெல்வராஜை பாராட்டிய இயக்குனர் மணிரத்னம்

October 30, 2025

AR ரஹ்மான் இசையில் ‘தேரே இஷ்க் மே’ படத்திலிருந்து ஓ காதலே பாடல் வெளியாகியுள்ளது!

October 30, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.