“மாமனிதன்” விமர்சனம்.
அப்பாக்களின் மதிப்பை மேலும் ஒருபடி பிள்ளைகளுக்கு உணர்த்தி காட்டிய உன்னதமான திரைப்படம் இந்த “மாமனிதன்”.
மனசாட்சிக்கு பயந்து ஒரு மனிதனாக வாழ முயற்சிக்கும் ஒவ்வொரு மனிதனும் மாமனிதன் தான் என்கிற ஒன் லைனை அழகாக படமாகவும் பாடமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படங்களை தொடர்ந்து 4வது முறையாக விஜய்சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணி அமைந்துள்ளது. விக்ரம் படத்தில் வெறித்தனமான சந்தனமாக நடித்த விஜய்சேதுபதியா இது என காட்சிக்கு காட்சி வியக்க வைக்கிறார்.
பேட்டை திரைப்படத்தில் ஒரு வில்லன் போன்ற கதாபாத்திரத்திலும், மாஸ்டர் திரைப்படத்தில் கொடூர வில்லன் கதாபாத்திரத்திலும், விக்ரம் திரைப்படத்தில் ஒரு டைப்பான வில்லன் என்ற கோணத்திலும் பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் மக்கள் செல்வனுக்கு இந்தப்படம் மேலும் ஒரு படி பலமே.
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆட்டோ டிரைவரான விஜய் சேதுபதி தன் பிள்ளைகளை கான்வென்ட் பள்ளியில் படிக்க வைக்க நினைப்பார்.இந்த ஆசை பிள்ளைகளைப் பெற்ற எல்லா தகப்பனுக்கும் உண்டு.இவர் ஆசையும் அப்படித்தான் சம்பாதிப்பது வீட்டிற்கு சரியா செலவாகி விடுகிறது என்ற கோணத்தில் மேலும் ஒரு படி மேலே போய் சம்பாதிக்கலாம் என்ற முறையில் அதுவும் நேர்மையான முறையில் ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்குகிறார் விஜய் சேதுபதி.நேர்மையான முறையில் நாம் மட்டும் நல்லா இருந்தால் போதுமா நாம் நம்பி இறங்கும் மற்றவர்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை மறந்து மக்களிடம் இருந்து பணத்தை வாங்கி ரியல் எஸ்டேட் ஓனரிடம் கொடுத்து ஏமாறுகிறார் விஜய்சேதுபதி.
நேர்மையான விஜய்சேதுபதிக்கு தான் ஏமாற்றப்பட்டது மட்டுமல்லாமல் தன்னை நம்பி பணம் கொடுத்த மக்களுக்கு என்ன பதில் சொல்வேன் என தன் மனசாட்சி குத்திக் கொண்டிருக்கையில் தன் குடும்பத்தை விட்டும், ஊரை விட்டும் வெளியேறுகிறார் விஜய் சேதுபதி.ரியல் எஸ்டேட் அதிபரை தேடி அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்கிறார் விஜய் சேதுபதி .
சென்ற இடத்தில் ரியல் எஸ்டேட் அதிபரின் தாயை சந்தித்து நடந்தவற்றை எடுத்துக் கூறிவிட்டு பிறகு குடும்ப கஷ்டத்திற்காக ஒரு நிறுவனத்தில் கழிவறையை சுத்தம் செய்யும் தொழிலாளியாக வேலை பார்க்கிறார் விஜய் சேதுபதி.
பிறகு இப்படத்தின் கதை வாரணாசியில் நடந்து படம் இனிதே நிறைவடைகிறது.
காசியில் நடைபெறும் இப்படத்தின் காட்சிகளில் சில பல சீன்கள் படம் பார்க்கும் ஒவ்வொரு மனதிலும் நிச்சயமாக பதிந்து விடுகின்றது.
விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கும் காயத்ரி அட டா இந்த சின்ன வயதில் இப்படி ஒரு நடிப்பா என்கிற அளவிற்கு மிக அற்புதமாக நடித்திருக்கிறார் காயத்ரி.
நிச்சயமாக உங்களுக்கு தேசிய விருது உண்டு.
விஜய் சேதுபதியின் முஸ்லிம் நண்பனாக வரும் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு அபாரம்.
படத்துக்குப் படம் வித்தியாசமான நடிப்பை கொடுத்து அசத்திக் கொண்டிருக்கும் குரு சோமசுந்தரதிற்க்கு வாழ்த்துக்கள்.
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாலும் முழு கூட பாலும் விஷமாகி விடும் என்பதை தன் திரைக்கதையின் மூலம் தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
விஜய் சேதுபதியின் நேர்மையை விவரிக்கும் விதமாக அந்த பண்ணைபுரம் ஊரிலேயே முதல் ஆட்டோ டிரைவர் என்ற அறிமுகத்தோடு அறிமுகமாகி அவரின் நேர்மைக்கான ஒரு காட்சி தன் ஆட்டோவில் ஒருவர் தவறவிட்ட தங்க நகைகளை கொண்டு போய் அவரிடம் சேர்க்கும் அந்த நேர்மைதான் மாமனிதன் .
இப்பேர்ப்பட்ட ஒரு இயக்குனருக்கு இளையராஜாவும், அவரின் மகனான யுவன்சங்கர் ராஜா வும் ஏன் இவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை.அவர்களுக்குள் என்ன நடந்ததோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.
இசையும், பாடல்களும், கதைக்கும், சூழலுக்கும் ஏற்ற மான முறையில் ரம்மியமாக மனதை வருடுகிறது.
அப்பன் தோற்ற ஊரில் மகன் ஜெயிப்பது சாதாரண விஷயம் அல்ல என்கிற கோணத்தில் ஆரம்பித்த இந்த கதையை தமிழக மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் இந்த மாமனிதனை.
விமர்சகர் – சரண்