• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

by Tamil2daynews
July 9, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

 

புதிய தயாரிப்பு நிறுவனம்   ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், DKS தனது முதல் படைப்பான “புரொடக்‌ஷன் நம்பர் 1” மூலம் திரைப்பட உலகில் தனது கால்பதிதுள்ளது . மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்க  படங்களில் இணை இயக்குனராகவும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும்  பணியாற்றிய, லோகன் இயக்கும் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு, திரையுலக பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான ஒரு இரவாக மாறியது.
இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மின்னும் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, நிகழ்வின் துவக்கமாக விளக்கேற்றும் விழாவில் கலந்து கொண்டார். தொகுப்பாளருடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுபட்ட அவர், “இது ஒரு வரலாற்றுப் பொழுது. இத்தகைய ஒரு படத் திட்டத்தின் தொடக்கத்தில் இருக்கிறேன் என்பது பெருமை!, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் என் வாழ்த்துக்கள்” என தனது உற்சாகத்தையும் வாழ்த்துகளையும் பகிர்ந்தார்.

AGS என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பல முக்கியப் படங்களில் தயாரிப்பு பொறுப்பாளராக பணியாற்றிய அனுபவம் கொண்ட டி. சரவணகுமார், இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்.புரொடக்‌ஷன் நம்பர் 1 படத்தின் தொழில்நுட்பக் குழுவில் உள்ள முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள்:

🎶 சந்தோஷ் நாராயணன் – இசையமைப்பாளர்
🎥 சந்தீப் கே. விஜய் – ஒளிப்பதிவாளர்
🛠 முத்துராஜ் – கலை வடிவமைப்பாளர்
🔊 ரசூல் பூக்குட்டி – ஒலி வடிவமைப்பாளர் (ஆஸ்கார் விருது பெற்றவர்)
💥 சுப்ரீம் சுந்தர் – ஃபைட் மாஸ்டர்

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, படத்திற்கான வீரர் அறிமுகம், படத்தின் பெயர் கூட அறிவிக்கப்படுவதற்கு முன்பே நடந்தது! அனைவரும் எதிர்பார்த்த அந்த நடிகர் — இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது திரையுலக அறிமுகம் இந்த படத்தின் மூலம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. நிகழ்வில் பேசிய ரெய்னா, தனது தோழரான எம்.எஸ். தோனியும் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதா எனக் கேட்டபோது, “அவர் தான் அதுக்கு பதிலளிக்க வேண்டும்!” எனச் சிரித்தபடி பதிலளித்தார்.

இந்த விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்த திரை பிரபலங்கள்:
எடிட்டர் மோகன், இயக்குநர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன், நடிகர் சதீஷ், இயக்குநர் விஜய் மில்டன், இயக்குநர் திருக்குமரன், இயக்குநர் பக்யராஜ் கண்ணன்

“இத்தனை திறமைமிக்க அணி மற்றும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் போன்ற உறுதியான ஆதரவு கொண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் என் இயக்குநர் பயணத்தைத் தொடங்குவது ஒரு கனவு நனவாகும் தருணம்,” என இயக்குநர் லோகன் உருக்கமாக தெரிவித்தார். “சந்தோஷ் நாராயணனும், ரசூல் பூக்குட்டி போன்ற உலகத் தரம் வாய்ந்த கலைஞர்களுடன் வேலை செய்வது சிறப்பான அனுபவமாக இருக்கும்,” என்றார்.

புரொடக்‌ஷன் நம்பர் 1 குறித்த மேலும் தகவல்களும், ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் நிறுவனம் இயக்கவிருக்கும் எதிர்காலப் படைப்புகள் குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளன.
Previous Post

”’ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படம் எனது கனவு” நடிகர் ருத்ரா!

Next Post

“ப்ரீடம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post

“ப்ரீடம்”பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.