• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு, மைசூரில் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!!

by Tamil2daynews
August 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்துள்ள பெத்தி (Peddi) படத்துக்கான பாடல் படப்பிடிப்பு,  மைசூரில் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் தொடங்கியது!!

 

குளோபல் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், முன்னணி இயக்குநர் புஜ்ஜி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கும்,  மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படம், பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. குளோபல் ஸ்டார் ராம் சரண் அசத்தலான மேக் ஓவர், வலிமையான உடல் மாற்றம், கடுமையான பயிற்சிகள் என அந்தக் கதாபாத்திரத்தை முழுமையாக வெளிப்படுத்த அவர் தனது முழு ஆற்றலையும் தந்து உழைத்து வருகிறார்.

மிகுந்த பெருமையுடன், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க,  விருத்தி சினிமாஸ், மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்க, மிகுந்த பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக  உருவாகி வரும் இப்படம், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் கிளிம்ப்ஸே, ராம் சரண் மேக் ஓவர் புகைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
Imageஇந்நிலையில், படக்குழு மைசூரில் குளோபல் ஸ்டார்  ராம் சரண் பங்கேற்க, பிரம்மாண்டமான பாடலைக் காட்சிப்படுத்த தொடங்கியுள்ளது. பிரபல நடன அமைப்பாளர் ஜானி மாஸ்டர் நடன அமைப்பில், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் இசையமைத்த இந்த மாஸ் பாடல், மிகப்பெரிய அளவில், 1000-க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் படமாக்கப்படுகிறது. ராம் சரண் தனது தனித்துவமான கவர்ச்சி மற்றும் ஆற்றல்மிகு நடன அசைவுகளால் ரசிகர்களை கவர, இந்தப் பாடல் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகவும், ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டமாகவும் அமைய உள்ளது.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகத்தில் இருந்தாலும், “பெத்தி” குழுவினர் தங்கள் பணியில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது.

இந்தப் படத்தில் முன்னணி கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்க, கருநாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். மேலும் ஜகபதி பாபு (Jagapathi Babu) மற்றும் திவ்யேந்து ஷர்மா ( Divyendu Sharm) முக்கிய துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் R. ரத்தினவேலு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க, தேசிய விருது பெற்ற நவீன் நூலி எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

பெத்தி 2026 மார்ச் 27 அன்று பான்-இந்திய ரிலீசாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர்கள்:
குளோபல் ஸ்டார்  ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து ஷர்மா.

தொழில்நுட்பக் குழு:
கதை, இயக்கம்: புஜ்ஜி பாபு சனா
வழங்குபவர்கள்: மைதிரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு
இசை: A.R. ரஹ்மான்
ஒளிப்பதிவு: R. ரத்தினவேலு
தயாரிப்பு வடிவமைப்பு: அவிநாஷ் கொல்லா
எடிட்டிங்: நவீன் நூலி
நிர்வாக தயாரிப்பாளர்: V. U. பிரவீன் குமார்
மார்க்கெட்டிங்: First Show
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Previous Post

நடிகர் ராஜ் அய்யப்பா M நடிப்பில், அறிமுக இயக்குநர் ராஜன் ரவி இயக்கும் புதிய படம் “Production No. 1” இனிதே துவங்கியது!!

Next Post

குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி!

Next Post

குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து மூன்று ஹிட் படங்கள் மூலம் ரசிகர்கள் மனம் கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி!

Popular News

  • பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

    பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” ( The Wedding Song ) வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.