• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் நடிப்பில் பரவசமூட்டும் திகில் திரைப்படம் ‘ஜின்’ கலகலப்பு டீசர் வெளியீடு

by Tamil2daynews
December 26, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் நடிப்பில் பரவசமூட்டும் திகில் திரைப்படம் ‘ஜின்’ கலகலப்பு டீசர் வெளியீடு

 

Teaser: https://youtu.be/my7WcCq9db4

4.5 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்து இணையத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘ஒத்த தாமரை’ பாடலை இயக்கிய டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் கலந்த திரைப்படம் ‘ஜின் தி பெட்’. இதன் டீசர் தற்போது வெளியாகி பாராட்டுகளை குவித்து வருகிறது.

டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்கும் ‘ஜின்’ திரைப்படத்தில் ‘பிக் பாஸ்’ வெற்றியாளர் முகேன் ராவ் மற்றும் ‘ஜோ’ திரைப்பட புகழ் பாவ்யா திரிகா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். தியா மூவிஸ் இப்படத்தின் வர்த்தக பங்குதாரர் ஆவார்.
பால சரவணன், டத்தோ ராதாரவி, இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, நிழல்கள் ரவி, விநோதினி, ஜார்ஜ் விஜய் மற்றும் ரித்விக் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். நவீன தொழில்நுட்பத்துடன் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட ஜின் எனும் கதாபாத்திரம் இப்படத்தில் முக்கிய இடம் பெறுகிறது.

சென்னை, ஹைதரபாத், கொச்சி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்களின் எட்டு மாத உழைப்பில் உருவான ‘ஜின்’ பாத்திரம் சுமார் 40 நிமிடங்கள் படத்தில் இடம் பெறுகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் இது கவரும்.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் டி ஆர் பாலா, “திகில், ஆக்ஷன், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட உணர்வுகள் கலந்த திரைப்படமாக‌ ‘ஜின்’ உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மலேசியாவை பின்னணியாக கொண்டு கதை நடக்கிறது. ஜின் பாத்திரம் அனைவரையும் கவரும்,” என்று தெரிவித்தார்.

முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் உள்ளிட்ட இளைஞர்கள் மற்றும் ராதாரவி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் உடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்று இயக்குநர் டி ஆர் பாலா குறிப்பிட்டார்.
‘ஜின்’ திரைப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைக்க, அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்.  தீபக் படத்தொகுப்பை கையள, கலை இயக்கத்திற்கு வி எஸ் தினேஷ் குமாரும், பாடல் வரிகளுக்கு விவேகா, கு கார்த்திக் மற்றும் விஷ்ணு எடவனும், சண்டைக்காட்சிகளுக்கு பேன்தோம் பிரதீப்பும் பொறுப்பேற்றுள்ளனர். இப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டிமா பாடல் இணையத்தில் ஏற்கனவே ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘ஜின்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இது வரை பார்த்த அனைவரும் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

திரைக்கதை ஆலோசனை: கருந்தேள் ராஜேஷ்; நடனம்: கலைமாமணி ஸ்ரீதர், அக்ஷதா ஸ்ரீதர்; உடைகள் வடிவமைப்பு: தீப்தி ஆர் ஜே; ஒலி வடிவமைப்பு & ஒலி கலவை: டி உதயகுமார்; கலரிஸ்ட்: ஷண்முக பாண்டியன் எம்; வி எஃப் எக்ஸ்: எஃபெக்ட்ஸ் & லாஜிக்ஸ்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்; பப்ளிசிட்டி டிசைன்ஸ்: ஃபாக்ஸ் ஐ.டி ஆர் பாலா‍ மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் டி ஆர் பாலா இயக்கத்தில் முகேன் ராவ், பாவ்யா திரிகா, பால சரவணன் நடிப்பில் பல்வேறு உணர்வுகளை கடத்தும் காதல் கதை ‘ஜின்’ திரைப்படத்தை விரைவில் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

Previous Post

கிச்சா சுதீப் நடிப்பில் கலைப்புலி S தாணு தயாரிப்பில் உருவான MAX திரைப்பட ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைப்பெற்றது

Next Post

ஹபீபி படத்தின் பாடலை வெளியிட்டார் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்!

Next Post

ஹபீபி படத்தின் பாடலை வெளியிட்டார் மாண்புமிகு தமிழக முதலமைச்சர்!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘The Last Customer’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘HIT 3’ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆருக்கு ‘வார்-2’ திரைப்படத்தின் அதிரடியான புதிய அறிவிப்பை பிறந்தநாள் பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிக்பாஸ் அர்ச்சனா : “வலுவான புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்!”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

யோகி பாபு – ரூக்ஸ் மீடியா கூட்டணியில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

May 20, 2025

”‘மையல்’ என் வாழ்வை மாற்றிய படம்”- நடிகர் சேது!

May 20, 2025

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

May 20, 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்‌ஷன் எபிக் ‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!

May 20, 2025

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

May 20, 2025

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

May 20, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.