• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !

by Tamil2daynews
November 14, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !

 

இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில்,  ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள  ‘கங்குவா’ திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், திரை ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.

“எதற்கும் துணிந்தவன்” படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் சூரியாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசிகர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது.  இப்படத்தில் இதுவரை வெளியான டீசர், டிரெய்லர்களில் இரண்டு விதமான பாத்திரங்களில் சூர்யா தோற்றம் மிரட்டலாக உள்ளது. முழுக்க ஸ்டைலீஷ் மாடர்ன் சூர்யா, போர் வீரனாகவும் கலக்கும் சூர்யா என இரு கதாப்பாத்திரங்களில் தொன்றும் சூர்யா, திரையில் மேலும் பல விதமான கெட்டப்களில் தோன்றவுள்ளார். கதை, பிரம்மாண்டம், விஷுவலாக மட்டுமல்லாது, இது உண்மையில் சூர்யா ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக இருக்கும்.
Tentative release date of Suriya's Kanguva - Tamil News | Online Tamilnadu News | Tamil Cinema News | Chennai News | Chennai Power shutdown Today | Chennai Vision3 வருட உழைப்பு இயக்குநர் சிவா அவரது குழுவுடன் இணைந்து,  3 வருட கடின உழைப்பைத் தந்து,  ‘கங்குவா’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியையும் பல வித திட்டமிடல்களுடன், இதுவரை ரசிகர்கள் கண்டிராத புதிய அனுபவம் தரும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளனர்.  இப்படத்தில் கடல் கப்பல் ஆக்சன் காட்சிகள், விமான நிலைய சண்டைக்காட்சிகள் டிரெய்லரில் காட்டப்பட்டதை  விட திரையில் இன்னும்  பிரம்மாண்டமாக இருக்கும்.  இதைத்தாண்டிய க்ளைமாக்ஸ் காட்சி திரையில் தீப்பொறி  பறக்க வைக்கும். ஒவ்வொரு சண்டைக்காட்சிகளும் பெரும் பொருட் செலவில், இந்திய சினிமா பார்த்திராத பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

தமிழின் முதல் பான் இந்திய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது. அனிமல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பாபி தியோல் நடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திஷா பட்டானிக்கு தென்னிந்தியாவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. சூர்யாவிற்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு இந்தியிலும் பெரும் வரவேற்பு உள்ளது. பான் இந்திய நடிகர்கள், கண்கவர் காட்சிகள், இது வரை பார்த்திராத திரைக்களம், புதுவிதமான திரைக்கதை, பிரம்மாண்டம் என தமிழிலிருந்து முதல் பான் இந்திய முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளது.

படத்தின் இறுதியில் யாருடைய கேமியோ இருக்கிறது என்பது தான், இப்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது. அது சஸ்பென்ஸ் என்றாலும், அந்த கேமியோ ரசிகர்கள் எதிர்பார்ப்பைவிட பல மடங்கு பிரம்மாண்டமாக இருக்கும் என்று இயக்குநர் சிறுத்தை சிவா கூறியுள்ளார்.

படத்தின் சிஜி, பழைய காலகட்டம், மாடர்ன் உலகம் எல்லாமே மிகத் தத்ரூபமாக  உருவாக்கப்பட்டுள்ளது. 3டி தொழில்நுட்பம் அத்தனை தெளிவாக அனைவரையும் அசத்தும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. “கங்குவா” உங்களை ஒரு புதிய மாய உலகிற்குள் அழைத்துச் செல்லும்.

கங்குவா  முன்னெப்போதும் இல்லாத அளவில், உலகமெங்கும் நாளை 10,500- 11,500 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இதுவரையிலான இந்திய சினிமா சாதனைகளை,  இப்படம் உடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

“கங்குவா”  கொண்டாட்டத்திற்கு இப்போதே நீங்களும் குடும்பத்தோடு  தயாராகுங்கள்.

Previous Post

குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் ‘கேம் சேஞ்சர்’ பட டீசர் வெளியீடு!

Next Post

முன்னணி திரை பிரபலங்கள் ‘ஃபயர்’ டீசரை வெளியிட்டனர்

Next Post

முன்னணி திரை பிரபலங்கள் 'ஃபயர்' டீசரை வெளியிட்டனர்

Popular News

  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.