• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ வைப் இருக்கு பேபி’ – ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது

by Tamil2daynews
July 25, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா நடிக்கும் ‘மிராய்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘ வைப் இருக்கு பேபி’ – ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது

 

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- கார்த்திக் கட்டமனேனி- டி.ஜி. விஸ்வ பிரசாத் – கிருத்தி பிரசாத் – பீப்பிள் மீடியா ஃபேக்டரி – கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான ‘மிராய்’ படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ ஜூலை 26 ஆம் தேதி வெளியாகிறது

‘ஹனுமான்’ படத்தின் மூலம் மிகப் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய பின் ‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா- அடுத்ததாக ‘மிராய் ‘படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான அளவில் அதிரடி ஆக்சன் படமான இதனை தொலைநோக்கு பார்வை திறன் கொண்ட இயக்குநர் கார்த்திக் கட்டமனேனியின் இயக்கத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கிருத்தி பிரசாத் ஆகியோர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்தது. அதன் பிரம்மாண்டமான காட்சி அமைப்பு – அதிவேகமான கதை சொல்லும் பாணி மற்றும் ஒரு வளமான கற்பனையுடன் கூடிய பிரபஞ்சத்துடனான ‘மிராய் ‘சூப்பர் ஹீரோ வரிசையில் மிகப் பெரும் புரட்சியாக இருக்கும் என உறுதி அளிக்கிறது.

படத்தின் இசை – ஜூலை 26 ஆம் தேதி முதல் வெளியாகிறது. இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான ‘வைப் இருக்கு பேபி’ எனும் பாடலுடன் இப்படத்திற்கான இசை தொடர்பான விளம்பரப் பணிகள் தொடங்குகிறது. இதனை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், ‘வைப் இருக்கு பேபி’ என மின்ன வைக்கும் டெக்னோ பீட் பாடலாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. இந்த பாடல் – முன்னணி ஜோடிகளான தேஜா சஜ்ஜா மற்றும் ரித்திகா நாயக் இடையேயான அற்புதமான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்துகிறது.
Imageதேஜா சஜ்ஜா கரடு முரடான மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் ஒரு நவ நாகரிகமான உடையில் வலுவான வீரமிக்க ஜோதி போன்ற ஒளியை வெளிப்படுத்துகிறார். ரித்திகா நாயக் பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் தேஜா சஜ்ஜாவுடன் ஒரு தீவிரமான தருணத்தில் தோன்றுகிறார். அவர்களுக்கு பின்னால் சூழலும் தங்கத்தினாலான ஆற்றல் மிக்க ஒரு மாயாஜால பாதையை உருவாக்குகிறது.  இது ‘மிராய்’ படத்தின் புராண மற்றும் கற்பனை உலகத்துடன் பொருந்தி சென்று, புதிதாக வேறொரு உலகத்தை காட்சிப்படுத்துகிறது.

நடிகர் மனோஜ் மஞ்சு அச்சுறுத்தும் வில்லனாக நடிக்கிறார். இவருடன் ஷ்ரியா சரண் , ஜெயராம்,  ஜெகபதிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் கார்த்திக் கட்டமனேனி படத்தை இயக்குவதுடன் ஒளிப்பதிவாளராகவும் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து வருகிறார். இப்படத்தின் திரைக்கதையையும் கார்த்திக் கட்டமமேனி வடிவமைத்துள்ளார். மணி பாபு கரணம் எழுத்து மற்றும் வசனத்தில் பங்களித்திருக்கிறார்.  கலை இயக்கத்திற்கு ஸ்ரீ நாகேந்திர தாங்கலா தலைமையேற்று ‘மிராய் ‘ படத்திற்கான உலகத்தை சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். இப்படத்திற்கு சுஜித் குமார் கொல்லி நிர்வாக தயாரிப்பாளராக மேற்பார்வையிடுகிறார்.

‘கார்த்திகேயா 2’, ‘ஜாட்’ ஆகிய பிளாக் பஸ்டர் ஹிட் படங்களுக்கு பின்னால் உள்ள படைப்பாற்றல் மிக்க பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘மிராய்’- இந்நிறுவனத்தின் பான் இந்திய பயணத்தில் ஒரு துணிச்சலான படைப்பாக இருக்கும் என்பதை பிரதிபலிக்கிறது. இப்படத்தின் டீசரில் இடம் பிடித்திருக்கும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் ..இப்படத்தின் சர்வதேச தரத்தை அடையாளப்படுத்துகிறது. மேலும் இது உலகளவிய தயாரிப்பு தரத்துடன் ஒப்பிடக்கூடிய ஒரு படைப்பாகவும் அமைந்திருக்கிறது. உண்மையில் இந்தத் திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு சாதனை எண்ணிக்கையிலான VFX காட்சிகளை கொண்டிருக்கிறது.

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘மிராய்’ திரைப்படம் -2 D மற்றும் 3 D  தொழில்நுட்பத்தில், எட்டு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

நடிகர்கள் :

‘சூப்பர் ஹீரோ’ தேஜா சஜ்ஜா , மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரியா சரண் , ஜெயராம், ஜெகபதி பாபு.

தொழில்நுட்பக் குழு :

இயக்குநர் : கார்த்திக் கட்டமனேனி
தயாரிப்பாளர்கள் : டி.ஜி .விஸ்வ பிரசாத்
கிருத்தி பிரசாத்
தயாரிப்பு நிறுவனம் : பீப்பிள் மீடியா ஃபேக்டரி
நிர்வாகத் தயாரிப்பாளர் : சுஜித் குமார் கொல்லி
இசை : கௌரா ஹரி
கலை இயக்கம் : ஸ்ரீ நாகேந்திர தாங்கலா
எழுத்து : மணி பாபு கரணம்

Previous Post

நடிப்பில் புதிய சவால்களை கொண்ட படமாக ‘பிளாக்மெயில்’ அமைந்தது”- நடிகை தேஜூ அஸ்வினி!

Next Post

”பிளாக்மெயில்’ படம் த்ரில், சர்ப்ரைஸ் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் கலந்து குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் படமாக இருக்கும்”- இயக்குநர் மு. மாறன்!

Next Post

”பிளாக்மெயில்’ படம் த்ரில், சர்ப்ரைஸ் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் என அனைத்தும் கலந்து குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் படமாக இருக்கும்”- இயக்குநர் மு. மாறன்!

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • 2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

2K காலகட்டத்தின் காதல் நினைவுகளைச் சொல்லும் “யுவர்ஸ் லவ்விங்லி” ( Yours Lovingly) … இறுதிக்கட்டத்தை நெருங்கும் படப்பிடிப்பு!

October 17, 2026
ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும்  ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

ஜெய் நடிப்பில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

October 17, 2026

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

October 17, 2026

துபாயில் வெளியிடப்பட்ட ‘தி ரீல் ஃபைல்ஸ்’ சீசன் 4-ன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் மற்றும் இயக்குநர் ஜெனோபர் பாத்திமாவை பாராட்டிய சோஹைல் கான்!

October 17, 2026

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

October 17, 2026

நடிகர் சூரியின் புதிய திரைப்படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த நடிகர் சிவகார்த்திகேயன்!

October 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.