திரெளபதி -2 – விமர்சனம்
பரபரப்பான கதைகள் கொண்ட படங்களை இயக்கி பரபரப்பை ஏற்படுத்தும் இயக்குனர் மோகன் ஜி இயக்கியிருக்கும் படம் திரௌபதி 2.
நாடகக் காதலை மையமாக வைத்து 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் திரெளபதி. அப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை மோகன் ஜி இயக்கிய இப்படத்தில் ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் வேல ராமமூர்த்தி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சுல்தான் மன்னன் சௌத் இந்தியாவில் நுழைந்து இங்குள்ள பெருமாள் கடவுளை வணங்கும் மக்களை வலுக்கட்டாயமாக மதம் மாற வற்புறுத்துவதுடன், பெண்களை பாலியல் தொல்லையும் செய்ய முற்படுகிறான்.. இதை பொறுத்துக்கொள்ளாமல் அரசரின் படை தளபதியான ஹீரோ ரிச்சர்டு ரிஷி களமிறங்க, இதன் பிறகு என்ன நடந்தது? ஹீரோ செய்த தரமான சம்பவங்கள் என்ன? என்பதே இந்த திரெளபதி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

ரிச்சர்ட் ரிசி ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் இப்படத்தில் வேறு ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கைதட்டலை பெறுகிறார்.
திரௌபதியாக அவர் நடித்திருக்கும் நடிகை தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிசியான நடிகையாக வலம் வருவார் அவரின் நடிப்பு கனக்கச்சிதம்.
மொத்த படங்களிலும் கதாநாயகன் என்று சொன்னால் அது ஜிப்ரான்தான்.பின்னணி இசை பின்னி இருக்கிறார்.
நட்டி நடராஜ் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நல்லபடியாக நடித்து ரசிகர்களிடம் இப்படியும் தன்னால் நடிக்க முடியும் என்று ஒரு நடிகனாக ஜெயித்திருக்கிறார்.
பாடல்கள் மனதில் ஒட்டாத ரகம்.
பாம்பே சென்று பட வேலை டெக்னீசியன் ரீதியாக அதிக அளவில் ரிஸ்க் எடுத்து மோகன் ஜி திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
படத்தின் ரைட்டிங் பெருசா கவரும்படி இல்லை. இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம். திரைக்கதை ஓட்டம் பல சீன்களில் பெட்டரா பண்ணிருக்கலாம் என தோன்ற வைத்தது. ஏகப்பட்ட கேரக்டர்கள் படத்தில் வருகிறார்கள், அவங்க யாருக்குமே திடமான ரோல் இல்லையோனு ஃபீல் ஆனது. ஏஐ மற்றும் வி.எஃப்.எக்ஸ் போர்ஷன்கள் எல்லாம் இன்னும் பெட்டரா பண்ணிருக்கலாம். ஹரி ஹர வீர மல்லு அளவுக்கு இல்லை என்றாலும். இந்த படத்திற்கு இது போதவில்லை. திரெளபதி 1 அளவுக்கு இப்படம் ரீச் ஆவது சந்தேகம் தான்.
மொத்தத்தில் நம் உரிமையை எவர் தடுத்தாலும் இதுதான் தண்டனை என்ற உன்னத கருத்தை உணர்த்திய மோகன் ஜி க்கு சபாஷ்.









