‘சில நொடிகளில்’ – விமர்சனம்

‘தல’ அஜித்தின் மனைவி ஷாலினியின் தம்பியும் நடிகருமான ரிச்சர்ட் தான் இப்படத்தின் ஹீரோ.படத்தில் பார்ப்பதற்கு முன்பை விட சற்று குண்டாகவே தெரிகிறார் ரிச்சர்ட்.படத்தில் யாஷிகாவோடு ரொமான் செய்வதை விட மனதில் ஒரு படபடப்பும் பதட்டமும் முகத்தில் வேறு ஒரு ரியாக்சன் வைத்துக்கொண்டு வேறு ஒரு முகபாவனையில் நடிப்பது சற்றே ஒட்டவில்லை.இது இவருக்கு மட்டுமல்ல சினிமா குடும்பத்திலிருந்து வந்த எல்லா நடிகர்களுக்குமே பொருந்தும்.
படத்தில் நல்லா நடிக்கிறாரோ இல்லையோ யாஷிகா உடன் ரொமான்ஸ் சீனில் புகுந்து விளையாடுகிறார் ரிச்சர்ட்.அதிலும் அந்த பெட்ரூம் காட்சி ரொம்ப ஓவர்.
படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் யாஷிகா ஆனந்த் மட்டுமே.தன் பங்குக்கு உடல் அசைவுகளை ஆங்காங்கே காட்டிவிட்டு தன் உடல் பாகங்களை மெல்ல மெல்ல காண்பித்து படம் பார்க்கும் அனைவரையும் சூடு ஏற்றுகிறார் யாஷிகா.

ஹீரோவிடம் பணம் கேட்டு மிரட்டும் யாஷிகாவின் உறவு பெண்ணாக நடித்திருப்பவர் மிக அற்புதமாக நடித்திருக்கிறார் முதல் படத்திலேயே யார் என கேட்க வைக்கிறார்.
படத்தில் நம்பர் ஒன் என்று சொல்லக்கூடியவர் கேமராமேன் அபிமன்யு சதானந்தன்.லண்டனின் அழகை நம் கண்களுக்குள் கொண்டு வந்து நமது கண்களை கொள்ளையடிக்கிறார் இந்த கேமராமேன்.இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு.
பாலிவுட் இசையமைப்பாளர் இசையமைத்திருக்கிறார் ஆனால் இசை பெரிதாக ஒட்டவில்லை.
கள்ளக்காதல், கணவன் மனைவிக்கு செய்யும், துரோகம்,கணவனுக்கு தெரியாமல் மனைவி செய்யும் துரோகம் என பார்த்து சலித்து போன கதைதான் போல என் நாம் நினைத்துக் கொண்டிருக்கையில் படத்தின் இறுதிக் காட்சியில் அவிழும் மர்மங்கள் நம்மை சீட்டின் நுணுக்கே கொண்டு செல்கிறது .இயக்குனர் வினை பரத்வாஜின் திரைக்கதை அபாரம்.
இப்படத்தின் பக்க பலமே படத்தின் நீளம் 93 நிமிடங்கள் என்பதுதான்.