• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) – விமர்சனம்

by Tamil2daynews
January 25, 2026
in விமர்சனம்
0
வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) –  விமர்சனம்
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) – விமர்சனம்

 

குகன் சக்ரவர்த்தியார் இயக்கி, தயாரித்து, நடித்து, பல தொழில்நுட்பப் பொறுப்புகளையும் (கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, சண்டை) ஏற்று, மாதா பிதா ஃபிலிம் பேக்டரி சார்பில் வெளியான ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்படம், ஒரு தனிமனிதனின் கடும் உழைப்பில் உருவான முயற்சியாகக் கருதப்படுகிறது.

இப்படம் அப்துல் கலாமின் கனவை மையமாக கொண்டு, நாயகன் குகன் சக்ரவர்த்தியார் கதாநாயகனாக நடிக்க, அலைனா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கனவு, உழைப்பு மற்றும் குறுநில மன்னன் என்ற பாணியில் ஒரு ஆக்ஷன் பாணி கதையை இப்படம் கொண்டுள்ளது.

காதல் தோல்வி அடைந்த சிவனாண்டி என்கிற அண்ணாச்சி (குகன் சக்கரவர்த்தியார்) பணம் சம்பாதிக்க முடிவு செய்து பெரிய பணக்காரர் ஆகிறார். ஊர் மக்களுக்கு நன்மை செய்கிறார். இந்நிலையில் தற்கொலைக்கு முயன்ற மாஜி காதலியை காப்பாற்றி அடைக்கலம் தருகிறார். அண்ணாச்சியின் நல்ல குணத்தை பார்த்து நண்பனின் மகள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அதை ஏற்று திருமணம் செய்கிறார். ஆனால் அண்ணாச்சிக்கு மனைவி மூலமும், மாஜி காதலி மூலமும் எதிர்பாராத சிக்கல்கள் வருகிறது. அது அவரது வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதை எதிர்பார்க்காத திருப்பங்களுடன் சொல்கிறது கிளைமாக்ஸ்.

படத்தின் ஹீரோ குகன் சக்கரவர்த்தியார் .நடிப்பு மட்டுமில்லாமல் இயக்கம், இசை, ஒளிப்பதிவு, கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் என 21 பொறுப்புக்களை ஏற்று இப்படத்தில் பணியாற்றி ஒரு கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்திருக்கிறார். 21 பொறுப்புகள் ஏற்றிருந்தாலும்  ஏனோ தானோ என்று படத்தை எடுக்காமல் ஒரு கதை, அதில் காதல், ஆக்சன், அரசியல் செண்டிமெண்ட், ஹாரர், மெசேஜ் என எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி இயக்கி இருப்பது ஆச்சரியத்தை தருகிறது

சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருக்கும் அளவுக்கு பெரிய புள்ளியான அண்ணாச்சி குகன் சக்கரவர்த்தியார் படம் முழுவதும் பட்டு ஜரிகை வேட்டி, கலர்ஃபுல் சட்டை என தனது கெட்டப்பை விட்டுக் கொடுக்காமல் பராமரித்திருப்பதுடன் நடிப்பை பொறுத்தவரையில் ஆக்சனிலும், சோகத்திலும், குத்தாட்டத்திலும் இறங்கி அடித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு காதல் கதையாக சென்றுக் கொண்டிருந்த படம் திடீரென்று பேய் கதையாக மாறுவது பின்னர் அது அரசியல் கதையாக உருபெறுவது என காட்சிகள் விறுவிறுப்பாக செல்கின்றன.திராவிட அரசியலை மையப்படுத்தும் வகையில் வங்காள விரிகுடா கடற்கரையில் துயில் கொண்டிருக்கும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி , புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா போன்றவர்களின் சமாதிகளுக்கு புதிய வடிவம் கொடுத்து மெரினா கடற்கரை பெயரை மாற்றி திராவிட கடற்கரை என பெயர் சூட்ட வேண்டுமென்று அரசுக்கு இயக்குனர் கோரிக்கை விடுத்திருப்பது அரசு கவனத்தில் கொள்ளத்தக்கது.

முழு படத்தையும் பார்த்த பிறகு அப்துல் கலாம் பற்றி இயக்குனர் சொன்ன விஷயங்களுக்காக அவரை பாராட்டியாக வேண்டும்.

ரேட்டிங் – 3 / 5
Previous Post

டோவினோ தாமஸ் பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Next Post

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் வழங்கும், நடிகர்கள் சித்தார்த், ராஷி கண்ணா நடிக்கும் ’ரெளடி & கோ’ திரைப்படத்தின் டீசர் போஸ்டர் கான்செப்ட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது!

Next Post

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் வழங்கும், நடிகர்கள் சித்தார்த், ராஷி கண்ணா நடிக்கும் ’ரெளடி & கோ’ திரைப்படத்தின் டீசர் போஸ்டர் கான்செப்ட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது!

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.