• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘இவன் தந்திரன்-2’ விறுவிறு படப்பிடிப்பில்..

by Tamil2daynews
July 9, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் ‘இவன் தந்திரன்-2’ விறுவிறு படப்பிடிப்பில்..

 

இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்.கண்ணன் ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் தனது திரைப்பயனத்தை துவங்கி, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட பல கமர்சியல் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
இதையடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள #காந்தாரி படத்தை தயாரித்து  இயக்கிய படத்தை இம்மாதம் (ஜீலை) வெளியிட திட்டமிட்டுள்ளார்.மேலும்,இயக்குநர் ஆர்.கண்ணன், தனது இயக்கத்தில் 2017ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ‘இவன் தந்திரன்-2’ என்கிற பெயரில் தயாரித்து  இயக்குகிறார்.

இப்படத்தை மசாலா பிக்ஸ் (MASALA PIX) நிறுவனம் தயாரிக்கிறது.
‘இவன் தந்திரன்’ படத்தில் சக்தி கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கும் அவரது நண்பராக ஆர்.ஜே பாலாஜியும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்திருந்தனர். பிரபல பொறியியல் கல்லூரியில் ஒரு மோசமான அமைச்சரின் துணையோடு நடக்கும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இப்படம் உருவாகி இருந்தது. மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு, சிறந்த விமர்சனங்களையும் பெற்று அதன்  தொடர்ச்சியாக உருவாகும் ‘இவன் தந்திரன் 2’ வும், அதே விறுவிறுப்பான  திரைக்கதையும் கதை களமும் அமைந்துள்ளது. தனது வேலையில் உறுதியாக இருக்கும் ஒருவன்  அதை நிறைவேற்ற அவன் என்னைன்ன செய்கிறான்  தான் என்பதே இன்றைய இளைஞகளுக்கான கதையாக அமைந்துள்ளது.

‘சிங்கம் 3;, ‘வடசென்னை’, ‘கேஜிஎப்’ உள்ளிட்ட படங்களில் இளம் நடிகராக நடித்து பிரபலமான நடிகர் சரண் நாயகனாக நடிக்கிறார்.  கல்லூரி மாணவரான சஷாங்க் முதன்மை  கதாபாத்திரத்தில்  அறிமுகமாகிறார்.
‘இந்தியன் 3’, ‘இரு துருவம்’, விரைவில் வெளியாக இருக்கும் ‘காளியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சிந்து பிரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது ஜெயம் ரவியின் கராத்தே பாபு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமுத்திரக்கனி வில்லனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையா, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தெலுங்கில் உள்ள அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ‘நம்ம ஊரு இசையமைப்பாளர்’ எஸ்.எஸ்..தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார்.

தற்போது ‘இவன் தந்திரன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்
கதை, இயக்கம் ; ஆர். கண்ணன்
ஒளிப்பதிவு ; பி.ஜி.முத்தையா
இசை ; தமன் எஸ்.எஸ்
திரைக்கதை ; ஷியாம் வெங்கடேசன்
வசனம் ; சித்தார்த் சுபா வெங்கட்
படத்தொகுப்பு ; எம்.நிரஞ்சன் ஆண்டனி
ஸ்டண்ட் ; சில்வா
நடனம் ; பாபி
பாடல்கள் ; சிவா ஆனந்த்
கலை ; பி..சண்முகம் ஆடை வடிவமைப்பு ; அஞ்சு ஸ்ரீ
மக்கள் தொடர்பு ; ஜான்சன்

Previous Post

சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த “மரியா” விரைவில் திரையரங்குகளில் !!

Next Post

‘3 BHK’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் அருண் விஸ்வா மற்றும் இயக்குநர் ஸ்ரீகணேஷ்!

Next Post

'3 BHK' திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் அருண் விஸ்வா மற்றும் இயக்குநர் ஸ்ரீகணேஷ்!

Popular News

  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.